வைரஸ் கட்டுப்படுத்தப்படாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா..!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பகீர்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 14, 2020, 4:10 PM IST

ஆனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, எனவே ஊரடங்கால் மட்டுமே இதை கட்டுப்படுத்திவிட முடியாது, நோய்த்தொற்றின் விகிதத்தை மட்டுமே அதனால் குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று உலகையே கவலைகொள்ள வைத்துள்ளது. கொரோனா நோய்ப்பரவலை தடுப்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி மற்றும் மருந்து குறித்த ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும்பாலும் நேர்மறையானதாக உள்ளன, ஒரு பிரத்தியேக தடுப்பூசி வரும்வரை, கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே  தீர்வாக இருந்துவருகிறது. இதுதவிர கொரோனா வைரஸை தடுக்க சமூக விலகல், முகமூடிகள் பயன்பாடு போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முக்கிய மூன்று தகவல்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானதும், கொரோனா வைரஸில் இருந்து விடுபட மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகவும் கருதப்படுவது கடுமையான ஊரடங்கே ஆகும்.  இதன் மூலம் இந்த தொற்று பரவுவது பெரிய அளவில் தடுக்க முடியும், இந்தியாவிலும் நான்கு கட்டங்களாக  ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுடன், கடுமையான ஊரடங்கு காரணமாக நியூஸிலாந்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடாகவே மாறியுள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, எனவே ஊரடங்கால் மட்டுமே இதை கட்டுப்படுத்திவிட முடியாது, நோய்த்தொற்றின் விகிதத்தை மட்டுமே அதனால் குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரசை முழுவதுமாக ஒழிக்க தடுப்பூசி அவசியம், ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்ற இத்தகைய சூழ்நிலையில் "மந்தை நோய்எதிர்ப்பு சக்தி" முறையே முக்கியத்துவம் பெறுகிறது, அப்படியானால் 60 முதல் 70 சதவீத  மக்களிடையே தொற்று பரவ வேண்டும்,  வைரஸ் தொற்று தொடர்ந்து வளர்ந்து அதிக மக்கள் தொகையை தாக்கினால், பலர் நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையால் கொரோனாவை வெல்வார்கள் என்பது நிபுணர்களின் கருத்து. ஆக அத்தகையவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டால், வைரஸ் தொற்று பரவ முடியாது என்பதை உலக அளவில் வல்லுனர்களின் கூற்று. இருப்பினும் சி.எஸ்.ஐ.ஆர் அதாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் இந்தியாவுக்கு அது பொருத்தமானது இல்லை என கருதுகிறது. அதே நேரத்தில் மற்றொரு ஆய்வின் படி கொரோனா வைரஸ் தொற்றைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வைரஸ் ஒரு வருடத்திற்குள் உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்தை பாதிக்கும், இந்தச் சூழ்நிலையில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகி இந்த நோய்த் தொற்றை தடுக்கும், அதேநேரத்தில் மனித சமூகம் இதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்,  ஏராளமான மக்கள் இறப்பார்கள். 

ஒரு தடுப்பூசி இல்லாமல் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை வெல்ல முடியும் என வல்லுனர்கள் கருதுகின்றனர், ஆனால் இந்தமுறை மனித சமூகத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுவதில்லை. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போதைய கொரோனா வைரஸ் சராசரி இனப்பெருக்க எண் (R0) 2 முதல் 2.5 வரை உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துகிறார். முகமூடி பயன்பாடு, சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த எண்ணிக்கையை ஒன்றாக குறைக்கலாம் என்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் ஒன்று முதல் 2, 4, 8, 16 வரை நிறைய பேருக்கு பரவுகிறது. எனவே அதிக அளவில் மக்கள் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த கொரோனா வைரஸ் சராசரி இனப்பெருக்க எண் R0 குறைக்கப்பட்டால், வைரஸ் பரவல் தானாகவே மறைந்துவிடும். அதே போல் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றால் கொரோனா  முடிவுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
 

click me!