சீனாவை ஆத்திரமூட்டும் அமெரிக்கா..!! இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அணிவகுத்த போர்க்கப்பல்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2020, 3:56 PM IST
Highlights

அமெரிக்க விமானம் தாங்கிய கப்பல்கள் ரோந்து மேற்கொண்டிருப்பதும்,  அதுவும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஏராளமான ஆயுதங்கள், போர் வீரர்களுடன் அமெரிக்க கப்பல் படையை சேர்ந்த 3 போர்க் கப்பல்கள் இந்த ரோந்தில் ஈடுபட்டிருப்பதும் சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க விமானம் தாங்கிய போர்கப்பல்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்குள் ரோந்து மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு சவால் விடும் செயல் என கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்கா அதிலிருந்து மீண்டு வந்துவிட்டது என்பதை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் இந்த ரோந்து நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்ககர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி கொத்துக்கொத்தாக உயிரிழந்துவருகின்றனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த சிறிய வைரசால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் இந்த பேரழிவுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருவதுடன், வைரஸை ஆரம்பத்திலேயே  சீனாவால் தடுத்திருக்க முடியும் என்றும், ஆனால் திட்டமிட்டே அதை அது தடுக்கவில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். 

அதுமட்டுமின்றி இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், அது சீனாவின் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்தது என்றும், அதற்கு தங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது என்றும், அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தென்சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் இருந்து வந்தநிலையில், கொரோனா விவகாரத்தில் இருநாட்டுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது சீனாவை கோபமடையவைத்துள்ளது, அதேபோல் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையிட்டால் சீனா சொல்ல முடியாத நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில், இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க விமானம் தாங்கிய கப்பல்கள் ரோந்து மேற்கொண்டிருப்பதும்,  அதுவும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஏராளமான ஆயுதங்கள், போர் வீரர்களுடன் அமெரிக்க கப்பல் படையை சேர்ந்த 3 போர்க் கப்பல்கள் இந்த ரோந்தில் ஈடுபட்டிருப்பதும் சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையின் வலிமையையும், கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீண்டுள்ளது என்பதன் அறிகுறியாகவும் இந்த ரோந்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குனர்,  போனிக் கிளாசர் கூறுகையில், அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக சீனா இதை நிச்சயமாக பார்க்கும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு வியூகத்தில் சீனாவுக்கு முக்கிய இடம் உண்டு என்பதை இது காட்டுகிறது. 

மேலும் பெண்டகன் அதிகாரிகள் இந்த பிராந்தியத்திற்கு அதிக அளவிலான ராணுவத் துருப்புகளை கொண்டுவர முயற்சித்து வருகின்றனர் என கூறியுள்ளார். மேலும் அமெரிக்க கடற்படை சக்தியின் அடையாளமாக  இந்தோ-பசிபிக் கட்டளையின் செயல்பாட்டு இயக்குனர் ரியர் அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் கூறுகையில், இந்த ரோந்து எங்கள் திறனை காட்டுவதற்கான ஒரு பகுதி மட்டுமே, நான் என் சகாக்களிடம் சொல்வதுபோல ஒரு போட்டியில் நீங்கள் இருந்தால் அதில் வெற்றிபெறுபவர்களாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் "விமானம் தாங்கி மற்றும் தாக்குதல் குழு அமெரிக்க கடற்படை சக்தியின் அடையாளங்கள்", இதனால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என அவர் தெரிவித்தார். அதேபோல் சீனா இராணுவ கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது என ரியர் அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர்  கூறினார். ​​சீனா மெதுவாகவும், தொடர்ச்சியாகவும் தென் சீனக்கடலில் இராணுவக் துருப்புகளை உருவாக்கி வருவதாகவும், அங்கு ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் அமைப்புகளை நிலைநிறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஸ்ப்ராட்லி தீவுகளில் சீனா சமீபத்தில் ஃபியரி கிராஸ் ரைப்பில் விமானங்களை நிறுத்தியதாக கோஹ்லர் கூறினார். 

click me!