#UnmaskingChina: விருந்துக்குபோன இடத்தில் விபரீதம் செய்த சீனா...!! ரஷ்யாவின் காலை பிடித்து கதறல்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2020, 3:27 PM IST
Highlights

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்தியாவுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களை வழங்க வேண்டாமென ரஷ்யாவிடம் சீனா வலியுறுத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .  இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.  இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, இந்திய எல்லையில் படைகளை குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறது.  கடந்த மே- 22 ஆம் தேதி இந்திய எல்லையில் படைகளைக் குவித்து இந்திய  இராணுவத்தின் ரோந்து பணிகளுக்கு சீனா இடையூறு  செய்துவந்த நிலையில், இந்தியாவும் பதிலுக்கு படைகளை குவித்ததால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய வீரர்கள் தடுத்து  நிறுத்தியதால்  இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. 

அதில் சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.  ஆனால்  தங்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது உண்மையை என சீனா ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் இருநாடுகளும் கூடுதல் படைகளை எல்லையில் குவித்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் போர் மூலலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் இருநாட்டுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன்மூலம் எல்லை பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சிகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் 73வது வெற்றி தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ரஷ்யா அழைத்ததன் பேரில் அவர் கடந்த 22ஆம் தேதி மாஸ்கோ விரைந்தார். இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான உறவு வலுபெற்றுள்ளதுடன். கடந்தாண்டு ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஆயுத ஒப்பந்தங்கள் குறித்தும் ரஷ்ய பாதுகாப்பு துறை  அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியாவுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களை விரைவாக வழங்குவதாக  ரஷ்யா உறுதி அளித்துள்ளது.

இந்திய தரப்பிலும் ஆயுதங்களை கையகப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு சாதகமாக பதிலளித்துள்ளது, ரஷ்ய நாட்டு பிரதமருடனான இச்சந்திப்பில் எனது விவாதங்கள் மிக நேர்மையானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது, எப்போதும் இந்தியா அமைதியை நேசிக்கும்  நாடு, பிறநாட்டின் பகுதிகளை ஒருபோதும் இந்தியா ஆக்கிரமித்தது இல்லை. அனைத்து மோதல்களையும் உரையாடல்கள் மூலம் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு அளித்தாலும் அதனுடைய இறையாண்மை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கப்படமாட்டாது.  சந்தேகத்திற்கிடமின்றி பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் இந்தியா உறுதியாக நின்று பாதுகாக்கும் என அப்போது அவர் கூறினார். இந்நிகழ்வின்போது சீன பாதுகாப்பு துறை அமைச்சரும் மாஸ்கோவில் இருந்தார் ஆனால் அவரை ராஜ்நாத் சிங் சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளன. சீனாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு சிஸ்டத்தை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்காக  கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் 5,000 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு, ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.
 

click me!