#UnmaskingChina:சீனாவின் மூக்கை உடைத்த ராஜ்நாத் சிங்..!! மூன்றாவது நாட்டில் வைத்து அவமானம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 24, 2020, 1:25 PM IST

ஆண்டுதோறும் ரஷ்யாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் இருந்து வருகிறார். 


ரஷ்யாவில் உள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வி பேங்க்
சந்தித்து இரு நாட்டு எல்லைப் பதற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை இந்தியா மறுத்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 22 ஆம் தேதி  ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விரைந்தார்.  இரண்டு தினங்களாக அவர் அங்கு இருந்துவரும் நிலையில்,  இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய- சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.  பல்வேறு காரணங்களால் இந்திய  எல்லையில் படைகளை  குவித்து இந்தியாவுக்கு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது.  அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது படைகளை குவித்து எல்லையை கண்காணித்து வரும் நிலையில்,  இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கடந்த ஜூன்-15 அன்று இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தடுத்ததில் இரு தரப்புக்கும் இடையே மோதல்  ஏற்பட்டு அதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  சீன தரப்பில் சுமார் 45 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அல்லது  உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சீனா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களையும் வெளியிடவில்லை. இதனைத்தொடர்ந்து இருநாடுகளும் கூடுதலாக எல்லையில் படைகளை குவித்து வருவதால்,  இரு நாட்டு எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்  ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் ரஷ்யாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் இருந்து வருகிறார். 

மூன்று நாட்கள் நடைபெறும் அந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார், அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக சீன பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அதில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ், சீன பாதுகாப்பு அமைச்சர் வி பேங்க் புதன்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்றும், மேலும் அவர் இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தீர்ப்பது குறித்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சரின் ராஜநாத் சிங்கின் அலுவலகம் குளோபல் டைம்ஸ் நாளிதழின் செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பிரதிநிதிகளை சந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் அதில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!