Aksai Chin railway: 1962ல் போருக்கு வித்திட்ட இந்திய எல்லைப் பகுதியில் ரயில்பாதை அமைக்கும் சீனா

By SG Balan  |  First Published Feb 13, 2023, 6:37 PM IST

திபெத்தில் உள்ள சீனாவின் தன்னாட்சி அரசு வெளியிட்ட அறிவிப்பில் சர்ச்சைக்குரிய இந்திய எல்லைப்பகுதி வழியாக புதிய ரயில்பாதை அமையப்போவதாகக் கூறப்பட்டுள்ளது.


இந்தியச் சீனப் போருக்கு வித்திட்ட சர்ச்சைக்குரிய பகுதி வழியாக புதிய திபெத் - சின்ஜியாங் ரயில்வே ரயில்பாதைத் திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

இந்தியச் சீன எல்லையை ஒட்டிய அக்சாய் சின் பகுதி வழியாக திபெத் மற்றும் சின்ஜியாங்கை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்கம் திட்டத்தை சீனா தொடங்க உள்ளது. திபெத் தன்னாட்சிப் பகுதியில் செயல்படும் அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த புதிய ரயில்பாதை திட்டம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இத்திட்டம் திபெத்துக்கு ஒரு நீண்டகால ரயில்வே திட்டமாக செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள 1,400 கி.மீ. நீள ரயில்பாதை 4000 கி.மீ. வரை நீட்டிக்கப்படும். இந்தியா மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளுக்கு அருகில் புதிய ரயில்பாதை போடப்படும்.

துருக்கி, சிரியா நிலநடுக்க பலி 50,000-ஐ தாண்டும்! ஐ.நா. தலைவர் கவலை

திபெத் - சின்ஜியாங் ரயில்வே திட்டம் என்ற அழைக்கப்படும் இத்திட்டம் சீனாவின் கனவுத் திட்டமாக இருந்துவருகிறது. ஜி219 தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் தொடர்ச்சியாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1962ஆம் ஆண்டு இந்திய சீனப் போருக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் இந்த ரயில்பாலை அமைய உள்ளது.

திபெத்தின் ஷிகேட்சி என்ற இடத்தில் தொடங்கி, நேபாள எல்லை ஊடாகச் சென்று அக்சாய் சின் பகுதியில் வழியே பயணிக்கும் இந்த ரயில்பாதை சின்ஜியாங்கின் ஹோடான் என்ற இடத்தில் முடியும். இந்தப் பாதை ரூடோக் வழியாகவும், பாங்காங் ஏரியைச் சுற்றியும் செல்லும். இதன் முதல் கட்டப் பணிகள் ஷிகாட்ஸே முதல் பகுக்ட்சோ வரை 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். மீதமுள்ள ஹோடான் வரையான பாதை 2035ஆம் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நேபாள-திபெத் எல்லையில் உள்ள ஜிரோங் வரையிலும், இந்தியாவின் சிக்கிம் மற்றும் பூடான் எல்லையில் உள்ள சும்பி பள்ளத்தாக்கில் இருக்கும் யாடோங் கவுண்டி வரையிலும் ரயில்பாதைகள் அமைக்கப்படும்.

அமெரிக்காவில் இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்து!

எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதுடன் தேவையான தருணங்களில் விரைந்து எல்லைப்பகுதிகளை அடையவும் இந்த ரயில்பாதை பயன்படும் என்றும் இத்திட்டம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா, நேபாளம், சீனா ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லைப் பகுதியில் சீனா புதிதாக பிரம்மாண்ட அணைக்கட்டு அமைப்பதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த அணை மூன்று நாட்டு எல்லைக்கு மிக அருகே பாயும் மப்ஜா சாங்போ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.

இதுபோல இந்திய திபெத் எல்லைப்புறங்களில் பெரிய பெரிய அணைக்கட்டுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் சீனா, எதிர்காலத்தில் இந்தியாவுடன் தண்ணீர் போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

Prabhakaran: பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை - இலங்கை ராணுவம் திட்டவட்டம்

click me!