China Plane Crash: விமானம் சட்டென கீழே விழும் முன், பத்து நொடிகள் விமானம் ஹால்ட் ஆகி, அதன்பின் 8 ஆயிரம் அடி வரை உயரே பறந்தது.
சீனாவில் கடந்த திங்கள் கிழமை 132 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737-800 விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொருங்கிய விபத்து நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்படாத மிக கொடூர விமான விபத்தாக இது அமைந்தது. இந்த விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
என்ன நடந்தது?
குன்மிங் பகுதியில் இருந்து புறப்பட்ட போயிங் MU5735 விமானம் தரையில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானம் கிழக்கு சீன பகுதியான குவாங்ஷோவை நோக்கி புறப்பட்டது. 100 கிலோமீட்டர்களில் தரையிறங்க இருந்த நிலையில், திடீரென விமானம் கீழே விழுத் தொடங்கியது. சரியாக ஒரு நிமிடம் 35 நொடிகளில் விமானம் கட்டுப்பாட்டை இழ ந்தை செங்குத்தாக மலைப்பகுதியின் மீது அதிவேகமாக விழுந்து நொருங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 132 பேரும் உயிரிழந்தனர்.
தற்போதைய சூழலில் இந்த விபத்து நடந்ததற்கான காரணங்களை மிகச் சரியாக கணிக்க முடியாது. விமான உபகரணங்கள் செயலிழப்பு, வானிலை அச்சுறுத்தல், விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு அல்லது தற்கொலை, தீவிரவாத தாக்குதல் என பலவற்றை இந்த விபத்துக்கான காரணங்களாக கூற முடியும். எனினும், இதுபற்றி எந்த விதமான தகவலும் உறுதியாக இதுவரை வெளியாகவில்லை.
ஆய்வாளர்கள் நோக்கம்?
தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. விமான கருப்பு பெட்டியில் காக்பிட் ரெக்கார்டர் உள்ளது. இது விமான விபத்து ஏற்படும் முன் விமானிகள் என்ன பேசிக் கொண்டனர் என்ற உரையாடலின் ஆடியோ பதிவாகி இருக்கும். இதனை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வர். இந்த விபத்தில் மீட்கப்பட்டு இருக்கும் கருப்பு பெட்டி மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதால், இதனை ஆய்வு செய்ய அதிக நேரம் ஆகும்.
விமானிகள் விவரம்:
சீனாவின் மிகவும் அனுபவம் மிக்க வர்த்தக விமானி ஒருவர் மற்றும் இளம் விமானி என இருவர் விபத்துக்குள்ளான போயிங் விமானத்தை இயக்கினர். இந்த விமானத்தின் கேப்டன் போயிங் 737 விமானத்தில் மட்டும் 6 ஆயிரத்து 709 மணி நேர Flying Hours அனுபவம் கொண்டவர் ஆவார். முதல் இணை விமானி ஒட்டுமொத்தமாக 31 ஆயிரத்து 769 மணி நேர Flying Hours அனுபவம் கொண்டவர் ஆவார். இரண்டாவது இணை விமானி ஒட்டுமொத்தமாக 556 மணி நேர Flying Hours அனுபவம் கொண்டவர் ஆவார். இவர்கள் அனைவருக்கும் மிக சிறந்த பணி அனுபவம் உள்ளது.
வேறு என்ன நடந்தது?
மைனிங் நிறுவனம் ஒன்றின் சிசிடிவி கேமராவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கடைசி நொடிகள் படமாகி இருக்கிறது. இது எந்த அளவு உண்மையானது என்ற விவரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. எனினும், விமானம் சட்டென கீழே விழும் முன், பத்து நொடிகள் விமானம் ஹால்ட் ஆகி, அதன்பின் 8 ஆயிரம் அடி வரை உயரே பறந்தது. வானிலை போக்குவரத்து அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானிகளை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்துள்ளனர். எனினும், விமானிகள் தரப்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
சீனா ஈஸ்டெர்ன் விளக்கம்
விமான விபத்துக்கான காரணம் பற்றி அறிந்து கொள்ள முழுமையான ஆய்வு நடத்தப்பட இருப்பதாக சீனா ஈஸ்டெர்ன் தெரிவித்து இருக்கிறது. விபத்தில் சிக்கிய போயிங் விமானம் 2015 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் பராமரிப்புகள் எவ்வித பாரபட்சமும் இன்றி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டது என சீனா ஈஸ்டெர்ன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.