இந்த நாடுதான் கொரோனாவை பரப்பியதா.!! வுஹான் இன்ஸ்டியூட் ஆப் வைரலாகி ஆய்வுக்கூடத்த தலைவர் வாக்கு மூலம்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 20, 2020, 10:58 AM IST
Highlights

தில் தற்போது பரவியுள்ள இந்த வைரஸ் ஆபத்தான வைரஸ்களை கையாளக்கூடிய சீனாவின் வுஹான்  இன்ஸ்டியூட் ஆப் வைரலாகி ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியது என கூறுவது முட்டாள் தனமானது, 

மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திவரும்  கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல இது மனிதர்களால்  உருவாக்கப்பட்டது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராக  கூறிவரும் நிலையில் , இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என வுஹான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் தலைவர் மறுத்துள்ளார். இது மனிதர்களால் தெரிந்தே உருவாக்கப்பட்ட வைரஸ் தான் என்ன தெரியவந்தால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் சீனாவின் வுஹான் ஆய்வுகூட தலைவர் இவ்வாறு கூறியுள்ளார் .  கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு மாதகாலம் சீனாவை புரட்டி எடுத்தது, இரண்டு மாதம் கடுமையான முயற்சிக்குப் பின்னர் அங்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போதைய பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது . 

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது அதுமட்டுமின்றி இத்தாலி , ஸ்பெயின் , பிரிட்டன் , ஜெர்மனி , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்த வைரசுக்கு சீனா தான் காரணம்  சீனாதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென அமெரிக்கா சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது . அதுமட்டுமின்றி வைரஸ் தொடர்பான தகவல்களை சீனா மறைத்து வருவதுடன் , வைராசால் ஏற்பட்ட பாதிப்பையும் சீனா மறைத்துவிட்டது என சீனா மீது அமெரிக்கா தன் கோபக் கணைகளை வீசி வருகிறது . ஆனால் சீனா அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் அடுத்தக்கட்ட நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோர் மீண்டும் சீனாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர் . 

இந்த வைரஸ் வுஹான் சந்தையிலிருந்து வவ்வால்கள் மூலம் பரவியது என சீனா கூறுவதை ஏற்க முடியாது  , இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து வந்ததல்ல இது சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து கசியவிடப்பட்ட வைரஸ் என குற்றம்சாட்டியுள்ளனர் .  சீனா உண்மையை மறைக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது .  இந்நிலையில் உலக பிரபல தொற்றுநோயியல் ஆராய்ச்சி வல்லுனரும் , தொற்றுநோயியல் ஆராய்ச்சியில் நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு அறிஞருமான லூக் மோன்தக்னேர் சீனாவின் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார் . அதாவது சீனா கூறுவது போல இது வுஹான் மார்க்கெட்டிலிருந்து வந்த வைரஸ் அல்ல வுஹான்  வைரல் ஆய்வுகூடத்தில் இருந்து வந்தது என கூறியுள்ளார், அதாவது  எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நோய்க்கிருமிகளை மனித உடலில் செலுத்தியதால் பரவியது,  அதாவது ஆய்வுக் கூடத்தில் வைரஸை தவறாக கையாண்டதால் ஏற்பட்ட விளைவு என குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த வைரஸ் வனவிலங்குகள் விற்பனை செய்யும் சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர் , 

அதேநேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள வுஹான்  இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி ஆய்வுக்கூடத்தின் தலைவர் யுவான் ஜிமிங் ,  சீன ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்,   அதில் தற்போது பரவியுள்ள இந்த வைரஸ் ஆபத்தான வைரஸ்களை கையாளக்கூடிய சீனாவின் வுஹான்  இன்ஸ்டியூட் ஆப் வைரலாகி ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியது என கூறுவது முட்டாள் தனமானது,  இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டு பரப்பும் சதி பிரச்சாரமாகும் ,  அவர்கள் கூறுவது போல இந்த வைரஸ் ,  ஆய்வுக் கூடத்திலிருந்து வந்தது அல்ல,  அது போல எந்த வைரஸ் கிருமியும் ஆய்வு கூடத்திலிருந்து கசியவும் இல்லை . இதுவரை ஒருவர்கூட எங்கள் ஆய்வுக்கூடத்தில் வைரசால் பாதிக்கப்படவில்லை . ஆனால்  இதைச் சில ஆங்கில ஊடகங்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. தற்போது தங்களது நிறுவனமும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம் . 

நாங்கள் ஏற்கனவே பிப்ரவரி மாதமே இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து இருக்கிறோம் ,  அதுமட்டுமின்றி ஜனவரி தொடக்கத்திலேயே உலக சுகாதார நிறுவனத் துடன் நோய்க்கிருமி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளோம், ஆனால் இந்த வாரம் மீண்டும் அமெரிக்கா இந்த வதந்திகளை பரப்ப தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார் .  தற்போது உங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் வந்திருக்கலாம் என்பதற்கான ஆராய்ச்சிகளில் பரிந்துரைக்கின்றவா என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு , அது போன்ற எந்த பரிந்துரையும் இல்லை அதற்கு சாத்தியமே இல்லை என அவர் பதில் அளித்துள்ளார் .  தற்போது கூறப்பட்டு வரும் புகார்கள் அடிப்படை ஆதாரமற்ற அறிவிலி தனமான ஒன்று என யுவான் தெரிவித்துள்ளார் .  
 

click me!