கொரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால்... சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. எரிமலையாய் கொதித்த டிரம்ப்..!

By vinoth kumar  |  First Published Apr 19, 2020, 5:46 PM IST

கொரோனா விவகாரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு முதலில் பாராட்டு தெரிவித்த டிரம்ப், திடீரென தடாலடியாக சீன வைரஸ் என குறிப்பிடவே, பதிலடியாக அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரஸை பரப்பியதாக சீனாவும் பரஸ்பரம் புகார் கூற, இருபெரும் பொருளாதார நாடுகளிடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்தது. 


கொரோனா வைரஸ் தொற்று குறித்து தெரிந்தே பரப்பியிருந்தால், சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக 7.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு வூஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்தே சீனா வெளிப்படையான தகவல்களை அளிக்கவில்லை என டிரம்பும், அமெரிக்க மூத்த அதிகாரிகளும் குற்றம்சாட்டி வந்தனர். 

Latest Videos

ஆனால், கொரோனா விவகாரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு முதலில் பாராட்டு தெரிவித்த டிரம்ப், திடீரென தடாலடியாக சீன வைரஸ் என குறிப்பிடவே, பதிலடியாக அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரஸை பரப்பியதாக சீனாவும் பரஸ்பரம் புகார் கூற, இருபெரும் பொருளாதார நாடுகளிடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்தது. இதனையடுத்து, சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப் வுகான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதாக வரும் தகவல்களை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒருவிதமான வவ்வாலிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த வவ்வால் வுகான் சந்தையில் இல்லை. அங்கிருந்து 40 மைல் தொலைவில்தான் அது காணப்படுகிறது. இதில், நிறைய மர்மமான விஷயங்கள் உள்ளன.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் எ்கிருந்து வந்தாலும் எந்த வடிவத்தில் வந்தாலும் 200 நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார். 

click me!