சீனாவில் சக்‍திவாய்ந்த நிலநடுக்‍கம் - பீதியில் மக்கள்

 
Published : Nov 26, 2016, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
சீனாவில் சக்‍திவாய்ந்த நிலநடுக்‍கம் - பீதியில் மக்கள்

சுருக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்‍கள் பீதியடைந்தனர்.

சீனாவின் தெற்கு Xinjiang மாகாணத்தை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்‍தி வாய்ந்த நிலநடுக்‍கம் ஏற்பட்டது. ரிக்‍டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் தாக்கம் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லை பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!