அரைமணி நேரத்தில் அமெரிக்காவையை அழிக்கும் பயங்கர ஏவுகணை...!! ராணுவ அணிவகுப்பு நடத்தி, மிரட்டிய நாடு...!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 2, 2019, 7:23 AM IST

பிஎஃப் 41 ரக ஏவுகணை சீனாவில் இருந்தபடியே சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து இலக்கை துல்லியமாக வெறும் 30 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை என்பதுதான். அது சுமார் 2500 கிலோ வெடிமருந்துகளை சுமந்துச் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டவையாகும். அது உலகில் எந்த பகுதியையும் தாக்கக்கூடிய ஏவுகணை என்பதால் சினாவின் போட்டி நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. 


அரை மணிநேரத்தில் அமெரிக்காவையே தாக்கி அழிக்கக் கூடிய அதி வல்லமை படைத்த ஏவுகணையை சீனா தன் ராணுவ  அணி வகுப்பில் நேற்று காட்சிப்படுத்தி உள்ளது.  வெளிப்படையாக அமெரிக்காவிற்கு விடப்படும் எச்சரிக்கையாகவே இது கருதப்படுகிறது. 

 

Latest Videos

ஆயுதபலமாக இருந்தாலும் சரி, அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் சரி, உலகத்தில் இரண்டு நேரெதிர் போட்டி நாடுகள் எது என்றால் சீனா அமெரிக்கா என்றுதான் சொல்லவேண்டும்.  அந்த அளவிற்கு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எதிலும் ஏழரைப் பொருத்தம். அதற்கு காரணம் சர்வதேச அளவில் யார் பெரியவர் என்ற போட்டி தான் என்றாலும், உலகத்தின் நாட்டாமையாக  தன்னை பாவித்து வரும் அமெரிக்கா தனக்கு இணையாக யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக செய்யும் சர்வதேச அரசியலும் அதற்கு ஒரு காரணம்.  ஆம்... ஆசிய கண்டமாக இருந்தாலும் சரி ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, அமெரிக்கா சொல்வது தான் சட்டம், அதை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது மனநிலை, இப்போது அதற்குப் போட்டியாக சீனா உருவாக்கி வருவதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்  இன்று அமெரிக்கா சீனாவை பல்வேறு வகையில் நெருக்கி வரும் நிலையில்.

ஒட்டுமொத்த அமெரிக்காவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு ராணுவ பலத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிளும் சீனா அசைக்கமுடியாத சக்தியாக உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீறுபூத்த நெருப்பாய் இருந்த பகை, சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி உயர்வு அளித்ததைத் தொடர்ந்து கனன்ற நெருப்பு தீப்பிழம்பாய் எரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனா அமெரிக்காவை வெளிப்படையாக மிரட்ட தொடங்கியுள்ளது. சீனாவின் தேசிய தினமான நேற்று தலைநகர் பீஜிங்கில் உற்சாகக் கொண்டாட்டம் நடைபெற்றது, அதில் சீனாவின் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில் எப்போதும் இல்லாத வகையில் அதிநவீன ஆயுதங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சீனாவின் அதி நவீன ஏவுகணையான பிஎஃப் 41 ரக ஏவுகணையும் அந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.

சீனாவின் அணிவகுப்பை கண்ட சர்வதேச நாடுகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அதற்குக் காரணம் சீனாவின் பிஎஃப் 41 ரக ஏவுகணை சீனாவில் இருந்தபடியே சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து இலக்கை துல்லியமாக வெறும் 30 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை என்பதுதான். அது சுமார் 2500 கிலோ வெடிமருந்துகளை சுமந்துச் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டவையாகும். அது உலகில் எந்த பகுதியையும் தாக்கக்கூடிய ஏவுகணை என்பதால் சினாவின் போட்டி நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. சமீபகாலமாக சீனாவின் பொருளாதாரத்தை மந்தமடையச் செய்ய அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே  இந்த ஏவுகணையை அணிவகுப்பில் வைத்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது என்பதுதான் சர்வதேச அரசியல் கணிப்பாளர்களின் கருத்தாக உள்ளது.  சீனாவிடம்  வாலாட்டினால் என்ன நடக்கும் என்பதற்கான சமிக்ஞை இது என்றும் எச்சரிக்கின்றனர்.
 

click me!