இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பாதயாத்திரைக்கு வரும் கர்தார்பூர் பாதையை திறக்க பிரதமர் இம்ரான் கான் உத்தவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். அதை சிறப்பான விழாவாக கொண்டாடவும் அவர் அறிவுருத்தியுள்ளதாக கூறிய குரேஷி, பிரதமர் இம்ரான்கானும் அந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றார்.
குருநானக் வழிபாட்டிற்காக பாதயாத்திரை செல்லும் கர்தார்பூர் பாதையைத் திறக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதை மிகப்பெரிய விழாவாக நடத்தவும் அதில் கலந்துகொள்ள இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது, மோடியை வெறுப்பேற்ற பாகிஸ்தான் செய்யும் வேலை எனவும் இது விமர்சிக்கப்படுகிறது.
சீக்கியர்களின் முதல் மதகுருவான குருநானக் அவர்களின் 550 ஆவது ஆண்டு பிறந்த தினம் வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ளது, ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் குருநானக்கை வழிபட பாகிஸ்தானுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டும் இந்தியாவிலிருந்து ஏராளமான சீக்கியர்கள் பாகிஸ்தான் குருதாஸ்பூர்க்கு பாதயாத்திரை செல்லவுள்ளனர்.
அதற்கான கர்தார்பூர் நடைபாதையை திறந்துவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதை இந்தாண்டு பெரிய விழாவாக கொண்டாடவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது, அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர். நவம்பர் மாதம் நடைபெற உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கிய குரு, குருநானக்கின் பிறந்த தினம் பாகிஸ்தானிலும் கோலாகாலமாக கொண்டாடப்பட உள்ளது என்றார். இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பாதயாத்திரைக்கு வரும் கர்தார்பூர் பாதையை திறக்க பிரதமர் இம்ரான் கான் உத்தவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். அதை சிறப்பான விழாவாக கொண்டாடவும் அவர் அறிவுருத்தியுள்ளதாக கூறிய குரேஷி, பிரதமர் இம்ரான்கானும் அந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றார்.
கர்தார்பூர் பாதை திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பாகிஸ்தான் மனப்பூர்வமாக வரவேற்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த அழைப்பு குறித்து மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து எந்த தகவலும் இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சில காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தானின் இந்த அழைப்பை மன்மோகன் சிங் ஏற்கமாட்டார் எனவும், அவர் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் ஒரு முறைகூட பாகிஸ்தானுக்கு அவர் பயணிக்கவில்லை என்றும் கருத்து கூறியுள்ளனர்.