அல்லா எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாங்கள் ஜிஹாத்தில் ஈடுபடுகிறோம்- மீண்டும் மிரட்டும் இம்ரான் கான்

By Selvanayagam PFirst Published Sep 30, 2019, 9:06 PM IST
Highlights

காஷ்மீரிகளுக்கு ஆதரவாக செயல்படுவது ஜிகாத், அல்லா எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாங்கள் அதை செய்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் மீண்டும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
 

கடந்த சில தினங்களுக்கு முன் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக 30 நிமிடங்கள் பேசினார். 

அவர் பேசிய 45 நிமிடங்களில் காஷ்மீர் விவகாரத்தை குறித்துதான் அதிகம் பேசினார். இந்தியா மீது இல்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். ஆனாலும் உலக தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. மேலும் பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி இம்ரான் கானுக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது.


அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று பாகிஸ்தானுக்கு திரும்பிய இம்ரான் கானுக்கு இஸ்லாமாபத் விமான நிலையத்தில் அவரது கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். 

அப்போது அவர்கள் மத்தியில் இம்ரான் கான், அது  (காஷ்மீரிகளுக்காக நிற்பது) ஜிஹாத். அல்லா எங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை செய்கிறோம். 

இது கடினமான நேரம் மற்றும் நேரம் நன்றாக இல்லாத நேரத்தில் மனதை தளர விடாதீர்கள். ஏமாற்றம் அடையாதீர்கள் காஷ்மீரிகள் உங்களை நோக்கி வருகிறார்கள். பாகிஸ்தான் மக்கள் காஷ்மீரிகள் பக்கம் நின்றால் அவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள் என பேசினார். 

click me!