அணு ஆயுதங்கள் பற்றிய அவர்களது புரிதல் வேறு; நம்முடைய புரிதல் மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான பகுப்பாய்வுகள் வேறு; எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார் ராகேஷ் குமார் சிங் பதவுரியா
பாகிஸ்தான் சீனாவிற்கு பதிலடி கொடுக்க தயார்..! இந்திய விமான படை தளபதி அதிரடி..!
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்ற ராகேஷ் குமார் சிங் பதவுரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது பல்வேறு தகவலை அளித்துள்ளார்.
அப்போது ரபேல் குறித்து பேசும் போது, "ரபேல் திறன் வாய்ந்த ஓர் போர் விமானம் என்றும் இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறன் படைத்தது, பாகிஸ்தான், சீனா எதிர்கொள்ள இந்தியாவுக்கான ஆயுதம் என்றால் அது ரஃபேல் என சொல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்
அதேப்போன்று பாலக்கோட் தாக்குதல் போலவே வேறு பெரிய தாக்குதல் நடத்தும் அளவிற்கு தற்போது இந்திய விமானப்படை தயாராக உள்ளதா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, தயாராக இருக்கிறோம். எந்தவொரு சவாலையும் எந்தநேரத்திலும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்; பாலக்கோடு தீவிரவாத முகாம்கள் மீண்டும் அப்பகுதியில் செயல்பட உள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தேவையான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
அதற்கு அடுத்த கேள்வியாக இந்தியாவுடன் அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளதற்கு தங்களுடைய கருத்து என்ன ? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகேஷ், அணு ஆயுதங்கள் பற்றிய அவர்களது புரிதல் வேறு; நம்முடைய புரிதல் மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான பகுப்பாய்வுகள் வேறு; எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார் ராகேஷ் குமார் சிங் பதவுரியா