HMPV பரவல்; சீனாவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா? சீன அதிகாரிகள் சொன்ன தகவல்!

By Asianet Tamil  |  First Published Jan 4, 2025, 1:19 PM IST

சீனாவில் HMPV வைரஸ் பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும், சீன அரசாங்கம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது. 


சீனாவில் மிகப்பெரிய அளவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச நோய்களின் பாதிப்புகள் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சர்வதேச பயணிகளுக்கு பெய்ஜிங் பாதுகாப்பானது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் பிற சுவாச நோய்கள் பரவுவது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பதிலளித்தார். அப்போது பேசிய அவர் "வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தை எட்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோய்கள் குறைவான தீவிரத்துடன் பரவுவதாகத் தெரிகிறது," என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ் ஆபத்தானதா?

மேலும் "சீன நாட்டினர் மற்றும் சீனாவுக்கு வருகை தரும் பயணிகளின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. சீனா வருகை தர பாதுகாப்பான இடம்," என்று அவர் அறிவித்தார்.

சீனாவில் HMPV என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இந்த வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பிற நாடுகளும் சீனாவில் பரவலான காய்ச்சல் தொற்றுநோய் பற்றி கண்காணித்து வருகின்றன.

இருப்பினும், குளிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வைரஸ் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த பல மாதங்களாக சீனாவில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவி வருகிறது. குளிர்காலத்தில் சுவாச நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களையும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

காய்ச்சல் அறிக்கைகளுக்கு இந்தியா எவ்வாறு எதிர்வினையாற்றியது?

 சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) டாக்டர் அதுல் கோயல், சீனாவில் HMPV பரவல் பற்றிய தகவல்களை வழங்கினார், இது கடுமையானது என்றாலும், பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும் "இது ஒரு பெரிய கவலைக்குரிய காரணம் என்று நாங்கள் நம்பவில்லை, ஏனெனில் இது ஒரு சாதாரண சுவாச வைரஸ் ஆகும், இது சளி போன்ற அறிகுறிகளையோ அல்லது சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளையோ ஏற்படுத்துகிறது.

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து! இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

"குளிர் மாதங்களில் ஏற்படும் சுவாச வைரஸ் தொற்றுகளின் அதிகரிப்பை நிவர்த்தி செய்ய நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் போதுமான படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து இல்லாததால், குறிப்பிட்ட ஆன்டிவைரல் மருந்துகள் தேவையில்லை," என்று தெரிவித்தார்.

click me!