ஆனால் தொடர்ந்து ஆத்திரமூட்டினால் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது இந்தியா என்றும் மோடி கூறியுள்ளார். இந்நிலையில்
கிழக்கு லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு முழு இறையாண்மை உள்ளது, அதாவது பங்கு உள்ளது என சீனா தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் இந்த பேச்சு மிகைப்படுத்தப்பட்டது என்றும் கல்வான் பள்ளத்தாக்கில் அதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லை நிலவரம் குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தளபதிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது என்றும், ஆனால் தொடர்ந்து ஆத்திரமூட்டினால் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது இந்தியா என்றும் மோடி கூறியுள்ளார். இந்நிலையில்
இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஜாவோ லிஜியான், கடந்த திங்கட்கிழமை இரவு எல்லையில் இந்திய வீரர்கள் அத்துமீறியதே இச்சம்பவத்திற்கு காரணம் எனவும், இனி இந்திய ராணுவம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் எல்லையில் இது போன்ற சூழலை சீனா விரும்பவில்லை எனவும் கூறினார். மேலும் தெரிவித்த அவர் கல்வான் பள்ளத்தாக்கில் முழு இறையாண்மை சீனாவுக்கு உள்ளது, கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது என அவர் கூறினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரு நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையை இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் கையாளவேண்டும் என கடந்த ஜூன்-6ஆம் தேதி ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த முடிவின் அடிப்படையில் இரு நாடுகளும் செயல்படவேண்டும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அதில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன், ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு சீனா முழு பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சீனா தன்னுடைய நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்து மாற்றிக் கொள்ள வேண்டுமென இந்தியா எச்சரித்துள்ளது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் முழு இறையாண்மையும் பங்கும் உள்ளது என சீனா கூறுவது மிகைப்படுத்தப்பட்டது, சீனாவின் இந்த கூற்றை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.