#UnmaskingChina: நாடு பிடிக்கும் ஆசையில் பள்ளத்தாக்கில் இறங்கிய சீனா..சமாதி கட்ட தயாராகும் இந்திய ராணுவம்

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2020, 11:46 AM IST
Highlights

இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில்  சீன  ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து, எல்லையில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இதனால் லடாக், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா ஏராளமான படைகளை குவித்துவருகிறது. சீனாவும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை கல்வான் பள்ளத்தாக்கில் குவித்துவருகிறது. இதனால் இந்த பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டக்கூடுமென அச்சம் உருவாகியுள்ளது. கடந்தே மே-5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் எல்லையில் இருநாட்டு வீர்ர்களுக்கும் இடையை ஏற்பட்ட மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து , கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல் சீன தரப்பிலும் 35 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லை நிலவரம் குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் ராணுவத்  தளபதிகளுடன்  நடத்திய ஆலோசனையின்போது பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தொடர்ந்து ஆத்திரமூட்டினால் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது இந்தியா என்றும் மோடி கூறியுள்ளார். 

இந்நிலையில் அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில்  இந்திய ராணுவம் கூடுதல் படைகளை குவித்து வருகிறது. மேலும் இந்திய விமானப்படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர் விமானங்களை எல்லை நோக்கி நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சீன ராணுவம் கனரக கட்டுமான உபகரணங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீரர்களுடன் கல்வான் பள்ளத்தாக்கில் குவித்துவருவதாக கூறப்படுகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் பதிவு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஏராளமான சீன ராணுவ வாகனங்கள் இருப்பதை ஏற்கனவே உறுதி செய்தது, இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு ஆங்கில நாளேடு, செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, முழு பள்ளத்தாக்கையும் ஷியோக் நதியையொட்டியுள்ள அனைத்து பகுதிகளையும்  கைப்பற்ற சீன முயற்சிப்பது போல் தெரிகிறது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!