சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 28 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 28 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் உள்ள ஹூனான் மாகாணத்தில் இருந்து ஹன்ஷூ மாகாணம் சாங்டே நகரை நோக்கி ஒரு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் 53 சுற்றுலாப் பயணிகள், 2 ஓட்டுநர்கள், ஒரு சுற்றுலா வழிகாட்டி இருந்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது. வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. இந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் தீக்காயங்களுடன் அலறித் துடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். படுகாயமடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை கிழக்கு சீனாவில் உள்ள ரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் பலியாகி, 640 பேர் தீக்காயமடைந்த நிலையில், பேருந்து தீ விபத்தில் 26 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.