படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து... 100 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Mar 22, 2019, 4:54 PM IST
Highlights

ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

ஈராக் நாட்டில் உள்ள மொசூல் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் அதன் ஒருபகுதியாக டைகரிஸ் ஆற்றை கடந்து மறுபுறம் சென்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக 160-க்கும் மேற்பட்டோர் பெரிய படகு ஒன்றில் டைகரிஸ் ஆற்றை கடந்துள்ளனர்.

 

அப்போது ஆற்றில் தண்ணீர் அதிக வேகத்தில் ஓடிய நிலையில், அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏறியதால் படகு திடீரென நீரில் மூழ்கியது. இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். ஆற்றின் நீரின் வேகம் அதிகமாக இருந்தால் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். 

இந்த துயரச்சம்பவத்தில் 61 பெண்கள், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவ தொடர்பாக தகவல் அறிந்து வந்த மீட்க்குழுவினர் 55 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவம் அந்த நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஈராக் பிரதமர் அதில் அப்துல் மெஹதி இரங்கல் தெரிவித்து, நாடு முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். 

click me!