China bans Uyghurs from fasting during Ramadan : சீனாவில் ரமலான் மாதத்தில் உய்குர் மக்கள் கட்டாயமாக வேலை பார்க்க வைக்கப்படுவதாக ஆர்எஃப்ஏ தெரிவித்துள்ளது. அதோடு அவர்களுக்கு நோன்பு இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
China bans Uyghurs from fasting during Ramadan :சீனாவின் ஜின் ஜியாங்கில் உள்ள சீன அதிகாரிகள் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் உய்குர் மக்களின் உழைப்பை அதிகரித்து வருவதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா (RFA) தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரமலான் மாதத்தில் உய்குர் மக்கள் கட்டாயமாக வேலை வாங்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், சிலர் வயல் வெளியிலும் சிலர் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். ஜின்ஜியாங்கில் வசிக்கும் சுமார் 12 மில்லியன் உய்குர்களிடையே மத சடங்குகளை சட்டவிரோதமாக்க அதிகாரிகள் எடுத்த பல நடவடிக்கைகளில் இந்த நடவடிக்கையும் ஒன்றாகும் என்று RFA வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களை கேடயமாக பயன்படுத்தும் ஹமாஸ்; தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் - அச்சத்தில் மக்கள்
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரையிலான ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் நோன்பு இருப்பார்கள். பெரும்பாலான நாடுகளில் முஸ்லீம்கள் நோன்பு இருப்பதை சுதந்திரமாக செய்கின்றனர். அப்படியிருக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத வெறியை எதிர்த்து போராடும் சீன அதிகாரிகள் ரமலான் மாதத்தில் நோன்புக்கு தடை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் பகல் நேரங்களில் உணவருந்துகிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோருகின்றனர்.
சுண்டு விரலில் 2 ஸ்பூன் மற்றும் ஃபோர்க்கை நிறுத்திய எலான் மஸ்க் – வீடியோ வைரல்!
நோன்பு இருப்பதை மட்டுமின்றி உய்ர்குர் முஸ்லீம் விடுமுறை நாட்களை கொண்டாடுவதையும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் பிரார்த்தனை செய்யும் அவர்களது வழக்கத்தையும் சீன அதிகாரிகள் தடை செய்துள்ளனர். RFA அறிக்கையின்படி, ரமலான் மாதத்தில் விவசாய வயல்களில் வேலை செய்யும் ஹோடன் குடியிருப்பாளர்களை சித்தரிக்கும் ஒரு வீடியோ சீன மொழியான டூயினில் பதிவேற்றப்பட்டது. இதே போன்று பதிவேற்றப்பட்ட மற்றொரு வீடியோவில், அனைத்து உய்குர் வீடுகளும் பொது சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இதன் காரணமாக சீன அதிகாரிகள் ரமலான் மாதத்தில் உய்குர் மக்களை வேலை செய்ய வைப்பதாக RFA கூறியது.
இதனை சீன அரசு, தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கை என்று நியாயப்படுத்துகிறது. ஆனால், மனித உரிமைகள் குழுக்கள் அவற்றை இனப்படுகொலை உள்பட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று விவரிக்கிறது.