வர்த்தகப் போர் விவகாரத்தில் ஒப்பந்தம் உடன்பாடு எட்ட சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி சீனா மீதான கூடுதல் வர்த்தக வரிகள் விதிக்கப்படும் என்றார்.
அமெரிக்கா மற்றும் சீனாவிடையே கடுமையான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது, அதை முடிவுக்கு கொண்டுவர சீனா முயற்ச்சிகளை மேற்கொண்டாலும் அமெரிக்க விட்டுக்கொடுக்காமல் தண்ணிகாட்டி வருகிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்பட்டும் அமெரிக்கா மற்றும் சீனாவிடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் இருந்துவருகின்றன, ஆசிய கண்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக சீனா வளர்ந்துவருவதுடன், ஆசியாவின் நாட்டாமையாகவும் தன்னை காட்டிவருவது அமெரிக்காவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போர் தற்போது வர்த்தகபோராகவும் மாறியுள்ளது.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை, எனவே இருநாடுகளும் பரஸ்பரம் மாறி மாறி வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என சீனாவின் துணை பிரதமர் .அதிரடியாக அறிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், சீனா மீதான பொருளதார தடைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பொருளாதார தடை தொடர்பாக சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. வர்த்தகப் போர் விவகாரத்தில் ஒப்பந்தம் உடன்பாடு எட்ட சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி சீனா மீதான கூடுதல் வர்த்தக வரிகள் விதிக்கப்படும் என்றார்.அதில் எந்த மாற்றமும் இல்லை என டரம்ப் அதிரடியாக தெரிவித்தார். அதாவது அமெரிக்காவில் சீன இறக்குமதி பொருட்களுக்கு வரிவிகிதம் 10 முதல் 15 சதவிகிம் வரை உயர்த்தப்படும் என தெரிகிறது, சீனா வர்தக விவகாரத்தில் அமெரிக்காவிடம் அடங்கப்போக முடிவு செய்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்த போதும் அமெரிக்கா அதை உதாசினப்படுத்திவருவது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெருகிறது.