கிழிந்தது சீனாவின் முகத்திரை...!! ஜி ஜின் பிங்கை அம்பலப்படுத்திய ஆங்காங் ஆய்வாளர்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 23, 2020, 4:38 PM IST

2 மாதத்துக்கு மேலாக சீனாவை வாட்டி வதைத்த இந்த வைரசால்  சீனாவில்  ஒட்டுமொத்தமாக  55 ஆயிரம் பேர் வரை பாதித்ததாக சீன ஆரம்பத்தில் தெரிவித்தது . 


சீனாவில் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது ,  ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சத்து 32 ஆயிரத்து க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய  ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .  சீனா தற்போது தெரிவித்துள்ளார் புள்ளி விவரத்தை காட்டிலும்  நான்கு மடங்கு அதிகம் என ஹாங்காங் கூறியுள்ளது .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது ,  இந்த வைரஸ் சீனாவின் மாகாணங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது .  2 மாதத்துக்கு மேலாக சீனாவை வாட்டி வதைத்த இந்த வைரசால்  சீனாவில்  ஒட்டுமொத்தமாக  55 ஆயிரம் பேர் வரை பாதித்ததாக சீன ஆரம்பத்தில் தெரிவித்தது . 

 

Latest Videos

பின்னர் அது படிப்படியாக உயர்ந்து வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது 83 ஆயிரமாக இருந்தது  எனவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ,3330 ஆக இருந்து பின்னர் தற்போது 4632 ஆக உயர்ந்துள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது . சீனாவில் நோய் தாக்கம் மற்றும் அதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து சீனா தெரிவித்த தகவல்கள்  உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது .  குறிப்பாக அமெரிக்கா இதை கடுமையாக விமர்சித்தது ,  சீனாவின் பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கையை சீனா முழுவதுமாக மறைத்து விட்டது எனவும் அது குற்றம் சாட்டி வருகிறது . இந்நிலையில்  சீனாவின் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்ட ஹாங்காங் பல்கலைக்கழக பொதுசுகாதார பள்ளியின் கல்வியாளர்களின குழு ,  சீனாவில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம் என தெரிவித்துள்ளது .  உலகச் சுகாதார நிறுவனத்தின் சார்பில் வுஹானுக்கு அனுப்பப்பட்ட குழு பிப்ரவரி மாதம்  20 வரையில் சேகரித்து  தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தது 

அதுமட்டுமின்றி இதுவரை சீனா தேசிய சுகாதார ஆணையம்,  ஜனவரி 15 முதல் மார்ச்-3 வரை  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை   7 அலகுகளாக பிரித்து வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சீனா வெளியிட்ட விவரங்கள் மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் என இவற்றையெல்லாம் ஒப்பிட்டு முதல் நான்கு அலகுகளை  2.8 முதல் 7.1 மடங்கு என கணக்கிட்டு, பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் சீனாவில் 55 ஆயிரத்து 508 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட எண்ணின் அடிப்படையில் கணக்கிட்டதில் சீனாவில் கிட்டத்தட்ட   2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சீனா தெரிவித்த கணக்கை விட நான்கு மடங்கு அதிகமாகும்,  நோய் பரவல் வீதத்தையும் அது இரட்டிப்பாகும் நேரத்தையும் வைத்து பார்க்கும்போது இந்த மாற்றங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . 

 

 

click me!