காதல் நெருக்கத்தை அதிகரித்த கொரோனா... லாக்டவுனிலும் ஓட்டலில் ரூம் போட்டு உல்லாசம்... வசமாக சிக்கிய ஜோடி..!

By vinoth kumar  |  First Published Apr 23, 2020, 4:16 PM IST

உலக நாடுகளே கொரோனா பீதியில் உள்ள நிலையில் இந்தோனேசியாவில் ஊரடங்கின் போது காதல் ஜோடிகள் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலக நாடுகளே கொரோனா பீதியில் உள்ள நிலையில் இந்தோனேசியாவில் ஊரடங்கின் போது காதல் ஜோடிகள் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்த ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக இந்தியா உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

இந்நிலையில், இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில் மதச்சட்டத்தை மீறுபவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 7000க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றபோதிலும் சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது. 

இத்தகைய சூழலிலும் மாகாண தலைநகர் பண்டா ஏஸில் நேற்று முன்தினம் இரவு, பகுதி நேர ஊரடங்கை மீறி திருமணம் ஆகாத காதல் ஜோடி ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அவர்களை பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தலா 40 முறை பிரம்பு அடி கொடுத்து தண்டனையை நிறைவேற்றினர்.  இதேபோல் மது அருந்திய 4 பேருக்கும் தலா 40 தடவை பிரம்பு படி கிடைத்தது.

click me!