சீனாவில் மீண்டும் லாக்டவுன்.. ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ் - உலக நாடுகள் பீதி !

By Raghupati RFirst Published Sep 2, 2022, 2:58 PM IST
Highlights

சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்கு பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மக்களை முடக்கியது கொரோனா வைரஸ்.

உலக நாடுகளையே பயமுறுத்திய கொரோனா எனும் கொடிய வைரஸ் முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டில் சீனா நாட்டின் உகாண் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்கு பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மக்களை முடக்கியது கொரோனா வைரஸ். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், ஹெனிபவைரஸ் என்ற வைரஸ் சீனாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

ஹெனிபவைரஸ் அல்லது லாங்யா என்று அழைக்கப்படும்  வைரஸ், நிபா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த வைரஸ்யின் பாதிப்பு அதிகமாக இருந்தால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கொள்ளக்கூடிய திறன் உடையது என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவின் ஹெனான் மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளது. லாங்யா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது ஆகும். 

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

இது ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு தொற்றுகிறதா என்று சரியாகத் தெரியாத நிலையில் இதற்கான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர். தொண்டையிலிருந்து எடுக்கும் எச்சில் மாதிரி மூலம் இந்த தொற்றைக் கண்டறியலாம். இதற்கு என்று தனியாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனவால் பல்வேறு நகரங்களில் மீண்டும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாளில் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஊரடங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

4 ஆம் தேதி வரையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம், ஆனால் அவர்கள் கொரோனா இல்லை என 24 மணி நேரத்துக்கு முன்னர் பெற்ற 'நெகடிவ்' சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நகரில் 2 கோடியே 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். 

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும் சூப்பர் மார்க்கெட்டுகள், விவசாயிகள் சந்தைகள், மருந்துகடைகள், ஆஸ்பத்திரிகள், உணவு வினியோக சேவைகள் உள்ளிட்டவை தடங்கல் இன்றி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் அச்சத்துடன் இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!