மீண்டும் மொத்த சீனாவையும் நடுநடுங்கவைத்த கொரோனா ரிப்போர்ட்.!! 70 நாட்கள் கழித்தும் உடலில் வைரஸ்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 23, 2020, 11:35 AM IST

நோய் ஏன் இத்தனை காலம்  நீடிக்கிறது என்பதை தங்களால் கணிக்க முடியவில்லை என்றும் இந்த வைரஸ் குறித்து இன்னும் முழுமையாக ஒரு முடிவுக்கு  வரமுடியவில்லை என்றும் சீன மருத்துவர்கள் கூறுகின்றனர் . 


சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து ,  குணமாகி வீடு திரும்பிய நிலையில்,  மீண்டும் 70 நாட்கள் கழித்து  அவர்களைப் பரிசோதித்ததில் அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .   இந்த சோதனை முடிவுகள் ஒட்டுமொத்த சீனாவையும் கதிகலங்க வைத்துள்ளன ஆனால் , இதுவரை இது போல் எத்தனை பேர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான புள்ளி விவரங்களை சீன அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக சீனாவை  வாட்டி வதைத்தது .  கிட்டத்தட்ட அங்கே 82 ஆயிரத்திற்க்கும்  அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டனர் நிலையில் அங்கு  4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

Latest Videos

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறி கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹான் நகரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு  திரும்பி உள்ளது .  இந்நிலையில் சீனாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு உடற் பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டது அதில் மீண்டும் பலருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.   அவர்கள் குணமடைந்து  கிட்டத்தட்ட  70 நாட்கள் கடந்துவிட்ட  நிலையில் ,  மீண்டும் அவர்களது உடலில் வைரஸ் தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரை நடத்தப்பட்ட மறு பரிசோதனையில்  சுமார் 12 க்கும் மேற்பட்டோருக்கு அந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.   இது சீனாவை மட்டுமல்லாது பிற நாட்டு சுகாதார அதிகாரிகளையும் கலக்கமடைய வைத்துள்ளது .   அதாவது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தால் போதும் , கொரோனாவில் ஆயுட்காலம் 14 நாள் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்நிலையில் பலருக்கு கொரோனா தொற்று  70 நாட்கள் கழித்தும் உடலில் இருப்பது அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென் கொரியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பலருக்கு 4 வராங்களை கடந்தும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது .  இத்தாலியும் இதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஒரு மாதங்கள் கழித்தும்  கொரோனா உடலில் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில் சீனாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட ஹூஷென்ஷன் தற்காலிக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நுரையீரல் பரிசோதனை நடைபெற்று வருகிறது .  நோய் ஏன் இத்தனை காலம்  நீடிக்கிறது என்பதை தங்களால் கணிக்க முடியவில்லை என்றும் இந்த வைரஸ் குறித்து இன்னும் முழுமையாக ஒரு முடிவுக்கு  வரமுடியவில்லை என்றும் சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி  குவோ யான்ஹோங் , இந்த நோயைப் பொறுத்தவரையில் வைரஸ் தொற்று அறியப்பட்டவர்களைவிட அறியப்படாதவர்களிடமே இது அதிகமாக உள்ளது என்றும் ,   நோயாளிகளை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி  எதிர்மறை நியூக்ளிக் அமிலம் சோதனைக்கு உட்படுத்திய   பிறகே வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள் என கூறியுள்ளார். ஆனாலும் நோய் தொற்று இருப்பது ஆச்சரியமாக உள்ளது என அதிரிச்சி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில்  இது குறித்து தெரிவித்துள்ளார் தென்கொரிய வல்லுனர்கள் கொரோனா வைரஸில் இருந்து சிலர் குணமடைந்தாலும் அந்த வைரஸ்கள் எங்காவது உடலில் ஒரு பகுதியில் ஒட்டியிருந்தாலும் கூட அது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது  என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீனாவின் ஜின்யின்டன் மருத்துவமனையின் தலைவர் ஜாங் டிங்யூ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே  மன அழுத்தத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த புதிய தகவல் மக்களை மனச்சோர்வடைய வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். 
 

click me!