இது ஆரம்பம்தான்... கொடூர கொரோனாவைவை இப்போதைக்கு அழிக்கவே முடியாதாம்... பதபதைக்க வைக்கும் அபாய அறிவிப்பு..!

Published : Apr 23, 2020, 10:46 AM ISTUpdated : Apr 23, 2020, 10:52 AM IST
இது ஆரம்பம்தான்... கொடூர கொரோனாவைவை இப்போதைக்கு அழிக்கவே முடியாதாம்... பதபதைக்க வைக்கும் அபாய அறிவிப்பு..!

சுருக்கம்

உலகில் பரவி வரும்  கொரோனா தொற்று நோய் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும். இன்றளவும் உலகில் உள்ள பல நாடுகள் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என  உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

உலகில் பரவி வரும் கொரோனா தொற்று நோய் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும். இன்றளவும் உலகில் உள்ள பல நாடுகள் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘’இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருந்ததாக நினைத்த சில நாடுகளில் புதிதாக தொற்றுகள் ஏற்பட தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் சிக்கலான போக்கு தான் நிலவுகிறது. ஐ.நா. சுகாதார நிறுவனம் வைரஸ் தொற்றால், உலகளாவிய அவசர நிலையை கடந்த ஜனவரி 30-ம் தேதி அறிவித்தது. அது சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலான இடங்களில், கொரோனா தொற்றுநோயின் தாக்கம் சீராக அல்லது குறைந்து வருகிறது. எண்ணிக்கை குறைவாக இருக்கிறபோதும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் புதிய தொற்றுக்கள் உருவாவதை காணமுடிகிறது. உலகளவில் பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோய்களின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. கொரோனா காரணமாக ஆரம்பகட்டத்தில் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் தற்போது மீண்டும் சில பாதிப்புக்களை காணமுடிகிறது.

எந்த தவறையும் செய்துவிடாதீர்கள். நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். இந்த வைரஸ் நம்மோடு நிறைய காலம் இருக்கப்போகிறது" என்று அவர் தெரிவித்தார். இந்த கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததா? என்று டெட்ரோஸ்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உலக நாடுகள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் அளவிற்கு முன்னதாகவே கடந்த ஜனவரி 30ம் தேதியே அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!