அதிக நேரம் கடலை போடுபவர்களா நீங்கள்...! கட்டாயம் இதை படிங்க...

By vinoth kumarFirst Published Oct 1, 2018, 12:43 PM IST
Highlights

செல்போனில் தொடர்ந்து 20 - 30 நிமிடங்கள் வரை பேசுபவர்களுக்கு 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படக் கூடும் என்று ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.

செல்போனில் தொடர்ந்து 20 - 30 நிமிடங்கள் வரை பேசுபவர்களுக்கு 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படக் கூடும் என்று ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், செல்போன் வைத்திருக்காதவர்கள் என்று யாரையும் கூற முடியாது. அனைவரும், செல்போன்களை பயன்படுத்தியே வருகின்றனர்.  

நேரில் பார்க்கும் நேரங்களைவிட, அவர்களுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசுவதையே பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுவும் இன்றைய இளைஞர்கள் செல்போன்களில் நீண்ட நேரம் பேசி வருகின்றனர். இந்த நிலையில், செல்போன் பயன்படுத்தி நீண்ட நேரம் பேசுபவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. செல்போனில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதால் அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளையை பாதிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூங்கும்போது, மொபைல் போனை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதாலும் அதன் கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 1985 ஆம் ஆண்டு செல்போன் அறிமுகப்பட்டதில் இருந்து தற்போது வரை மூளை புற்றுநோய் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அந்த ஆய்வில் வெளியாகி உள்ளது. செல்போன் கதிர்வீச்சால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பிரான்ஸ் நாட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!