கொரோனாவின் கோர பிடியிலிருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி...!

By vinoth kumarFirst Published Mar 29, 2020, 4:25 PM IST
Highlights

கனடாவில் கொரோனாவால் 5,655 பேர் பாதிப்படைந்துள்ளனர். 60 உயிரிழந்துள்ளனர். 508 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலைில், சமீபத்தில் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரிகோயர் தான் குணமடைந்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

கனடாவில் கொரோனாவால் 5,655 பேர் பாதிப்படைந்துள்ளனர். 60 உயிரிழந்துள்ளனர். 508 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலைில், சமீபத்தில் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். 

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பிரதமரின் மனைவி சோஃபி பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மனைவி சோஃபியும் கூறியதாவது;- இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை உணர்கிறேன். என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!