
கனடாவில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு பிரதமர் தனது தமிழ்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
தமிழர்களையும் தமிழர்களின் தொண்மைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடும் நாடு கனடா.உள்நாட்டுப் போரால் வீழ்த்தப்பட்டு வீடிழந்து நாடிழந்து உறவிழந்து துரத்தப்பட்ட பல்வேறு நாட்டு மக்களை இரு கரம் கூப்பி வரவேற்கும் நாடு கனடா..
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இத்தேசத்தில் தமிழ் கலாச்சாரப் பண்டிகையான பொங்கல், தீபாவளி ஆகியவை அந்நாட்டு அரசால் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கும் மேலாக 'தமிழ் மரபுத் திங்கள்' என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான, மசோதா கனடா பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இருந்த பிரதமர்களை விட தற்போது பொறுப்பேற்றிருக்கும் ஜஸ்டின் ட்ருடே, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
தீபத் திருநாளாம் தீபாவளியைத் தொடர்ந்து தற்போது தமிழ் புத்தாண்டிற்கும் ஜஸ்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களின் புத்தாண்டு தினத்தை வரவேற்கிறேன்.
இந்த புத்தாண்டில், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் கூடி கொண்டாடுவதோடு மட்டுமின்றி வரும் வருடம் அவர்களுக்கு சிறப்பாக அமைய கடவுள் வழி காட்டுவார்." என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஜஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.