
உருகுவே நாட்டில் மருந்துக்கடைகளில் கஞ்சா விற்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் மட்டும் கஞ்சா பயன்படுத்த சட்டம் வழிவகை செய்துள்ளது. அதன்படி, மரிஜுவானா எனப்படும் போதை தரும் கஞ்சா பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. அதாவது தென் அமெரிக்க நாட்டில், முதன் முறையாக கஞ்சா பயன்படுத்துவது உருகுவே நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அரசாணையை 2013-ஆம் ஆண்டே, உருகுவே அரசால் அனுமதி வழங்கப்பட்டுவிட்டாலும், வரும் ஜூலை மாதம் தான் கஞ்சா விற்பனை நடைமுறைக்கு வர உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது .
எங்கு விற்கப்படும் ?
உருகுவே நாட்டில் உள்ள மருந்து கடைகளில், நபர் ஒன்றுக்கு மாதம்தோறும் அதிகபட்சமான 40 கிராம் வரை கஞ்சா வாங்கிக் கொள்ளலாம் என்றும், கஞ்சா வாங்க வேண்டுமென்றால்,அந்நாட்டு தேசிய தேசிய பதிவேட்டில், தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : வெளிநாட்டு நபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சட்டத்தின் மூலம் கஞ்சாவை உருகுவே குடிமகன்கள் தங்கள் வீட்டிலே வளர்க்க முடியும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது .