
பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஃபிராங்க் ஸ்ட்ரோனாச், நேற்று ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கன்னடா நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இப்பொது 91 வயதாகும் ஃபிராங்க் ஸ்ட்ரோனாச், கனடாவின் ரொறன்ரோ புறநகர் பகுதியான அரோராவில் இருந்து கைது செய்யப்பட்டார்.
இவருடைய வழக்கில் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி 1980 களில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு வரை அவர் தொடர்பான பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் கூறியுள்ளது. "ஃபிராங்க் ஸ்ட்ரோனாக் கைது செய்யப்பட்டு, கற்பழிப்பு, ஒரு பெண் மீது அநாகரீகமான தாக்குதல் நடத்தியது, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட ஐந்து கிரிமினல் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
மீண்டும் 600 பலூன்களில் குப்பையை அனுப்பிய வடகொரியா! தென் கொரியா கடும் கண்டனம்!
மேலும், இவருடைய விவகாரத்தில் உரிய தகவல் தெரிந்தால், அதை போலீசாரிடம் கூற முன்வருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாகன உற்பத்தியாளர்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் கனடாவின் மேக்னா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ட்ரோனாச், நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டு, பின்னர் பிராம்ப்டனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் "முற்றிலும் மறுப்பதாக" அவரது வழக்கறிஞர் கூறினார். "குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாக பதிலளிப்பதற்கும், ஒரு பரோபகாரராகவும், கனேடிய வணிக சமூகத்தின் அடையாளமாகவும் தனது மரபைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை அவர் எதிர்நோக்குகிறார்" என்று ஸ்ட்ரோனாச்சின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரையன் கிரீன்ஸ்பான் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கனடா நாட்டில் மிகவும் பிரபல தொழில் நிறுவனத்தின் தலைவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அதுவும் கடந்த 40 ஆண்டுகளாக அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார் என்று வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்! பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்சாக நடனம்!