தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் படித்துள்ள தலிபான்கள், காபூல் நகரிலுள்ள அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவந்த தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்தனர். உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என சீனா அறிவித்துள்ளது. இந்நிலையில், கனடா நாட்டு சட்டத்தின்படி தாலிபன்கள் தீவிரவாதிகள் தான் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர், ‘’தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக கனடா ஏற்காது. ஆப்கனில் உள்ள கனடா நாட்டினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதிலேயே எங்களின் முழு கவனம் இருக்கிறது. வெளிநாட்டினர் ஆப்கனில் இருந்து வெளியேறுவதை தாலிபான்கள் தடுக்கக்கூடாது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆப்கன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.