'வீடு வாங்கினால் மனைவி இலவசம்!' சர்ச்சையைக் கிளப்பிய ரியல் எஸ்டேட் விளம்பரம்!

By SG Balan  |  First Published Jan 27, 2024, 4:20 PM IST

விளம்பரம் ட்ரெண்டாகி நாடு முழுவதும் கவனம் பெற்றது. ஆனால், மக்களிடம் இருந்து வந்த  எதிர்வினை தலைகீழாக இருக்கிறது. பலர் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் விநோதமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில்,  சீனாவில் தியான்ஜினைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 'வீடு வாங்கினால், மனைவி இலவசம்' என்று விளம்பரம் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விளம்பரம் மக்களிடம் நிறுவனத்தை பிரபலப்படுத்த உதவும் என்றும் வீடுகள் விற்பனையை அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் கருதியது.

Tap to resize

Latest Videos

எதிர்பார்த்தபடி, இந்த விளம்பரம் ட்ரெண்டாகி நாடு முழுவதும் கவனம் பெற்றது. ஆனால், மக்களிடம் இருந்து வந்த  எதிர்வினை தலைகீழாக இருக்கிறது. பலர் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டுப் பெண்கள் மத்தியில் இந்த விளம்பரம் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் என்ற நாடே அழித்து ஒழிக்கப்படும்!: பாக். ராணுவ தளபதி பேச்சுக்கு தாலிபான் பதில்!

பெண்களை பரிசு பொருட்கள் போல விளம்பரம் செய்திருப்பதாகவும்  உடனடியாக இந்த விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையைக் கண்காணிக்கும் அமைப்பு விசாரணை நடத்த முன்வந்தது.

பின்னர், தங்கள் விளம்பரத்துக்கு விளக்கம் கொடுத்த ரியல் எஸ்டேட் நிறுவனம், பொதுமக்கள் தங்கள் விளம்பரத்தைப் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டனர் என்று கூறியுள்ளது. எங்களிடம் வீட்டை வாங்கி, உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்றுதான் விளம்பரத்தில் கூறியிருக்கிறோம் எனவும் அதை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அந்த நிறுவனம் விளக்கம் கொடுக்கிறது.

இந்த விளக்கத்தை ஏற்காத ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பு அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  மேலும், சர்ச்சைக்குரிய விளம்பரத்தை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஹமாஸ் படையிடம் உள்ள 3 பெண் பிணையக்கைதிகள்.. வெளியான வீடியோ - அந்த பெண்கள் கொடுத்த தகவல் என்ன தெரியுமா?

click me!