இலங்கையில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த பேருந்து விபத்துகளில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடையந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இலங்கையில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மனம்பிட்டிய என்ற இடத்தில் கொட்டலிய பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பேருந்து நடந்துள்ளது.
பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட பேருந்து மரப்பாலத்தில் இருந்து விலகி நீரில் மூழ்கியது. இதில் விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர்.
119 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகம்! அமெரிக்க நூலகத்தில் நிகழ்ந்த அதிசயம்!
அருகில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்றி, உயிரிழ்ந்தவர்களின் உடல்களை கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) குருநாகல் - அம்பன்பொல பகுதியில் நிகழ்ந்த மற்றொரு பேருந்து விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!
கூரகலவிற்கு யாத்திரைச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பேருந்து அம்பன்பொல பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னருடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதிகரித்து வரும் பணக்காரக் குடும்பங்கள்... தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ஆய்வில் தகவல்