சிங்கப்பூரில் பேருந்து, ரயில் கட்டண உயர்வு மூலம், மூலாதார பணவீக்கம் 0.17 சதவீதம் உயர வழிவகுக்கும் என வர்த்தக, தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பொது போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், சிங்கப்பூரில் பொது போக்குவரத்து (ரயில் மற்றும் பேருந்து) பயணக் கட்டணம் 7 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த அதிகரிப்பு கட்டணம் வரும் டிசம்பரில் 23ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பொது போக்குவரத்து கட்டண உயர்வின் விளைவாக அடுத்த ஆண்டில் சிங்கப்பூரின் மூலாதார பணவீக்க விகிதம் 0.17 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
போக்குவரத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கத்தில் அல்லது ஒட்டுமொத்த விலைவாசி உயர்வில் பொது போக்குவரத்து கட்டணம் 1.6 சதவீதம் பொறுப்பு வகிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தனியார் போக்குவரத்து கட்டணத்தை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கத்தில் அது 2.5 சதவீதம் பொறுப்பு வகிக்கிறது எனவும் அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டுள்ளார்.
Singapore News | இ-சிகரெட் பிடியில் சீரழியும் மாணவர்கள்! கவலையில் சிங்கப்பூர் கல்வித்துறை!
மேலும், வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயர்வு குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. .
சிங்கப்பூர்வாசிகளே கவனம்! புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பு! வெளியே செல்லும் முன் காற்றின் தரத்தை செக் செய்யவும்
அதற்கு பதிலளித்த அமைச்சர் கான் கிம் யோங், அடுத்த ஆண்டிற்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தை இப்போது கணித்துகூற இயலாது என்றும், அதேபோல, பணவீக்கத்தில் அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் இப்போது கூற இயலாது என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D