தாராள வர்த்தக மண்டலங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரில், கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் விவகாரங்களில் அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் பத்து தாராள வர்த்தக மண்டலங்கள் வழியாக சரக்குகள் செல்வதற்கான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் சீர்படுத்தி மேம்படுத்தும் வகையில் இதை சட்ட திருத்தங்களை செய்ய சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது
சிங்கப்பூர் நாட்டில், தாராள வர்த்தக மண்டலங்களை நிர்வகித்து நடத்தி வருபவர்களுக்கு உரிமம் முறையை அறிமுகப்படுத்துதல், சரக்குகளை கையாளுவோருக்கு புதிய விதிமுறைகளை உருவாக்குதல், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிக அமலாக்கப் பிரிவு அதிகாரங்களை வழங்குதல் போன்றவைகளில் திருத்தங்கள் மேற்கொண்டு மேம்படுத்த வேண்டும் என நிதி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
Singapore News | இ-சிகரெட் பிடியில் சீரழியும் மாணவர்கள்! கவலையில் சிங்கப்பூர் கல்வித்துறை!
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை திருத்தச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஆயுத நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் குற்றங்கள், வரத்தக அடிப்படையில் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு தாராள வர்த்தக மண்டலங்கள் பயன்படுத்துப்படுத்துவத் கவலை அளிப்பதாக அமைச்சர் சீ ஹெங் டாட் தெரிவித்தார். இந்த சூழலில் தாராள வர்த்தக மண்டல சட்டத் திருத்த மாற்றங்கள் தேவை என்றும் அமைச்சர் சீ ஹொங் டாட் விளக்கினார்.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D