புருனே நாட்டு இளவரசர் அரச குடும்பத்தை சாராத தனது காதல் மனைவியை கரம் பிடிக்கவுள்ளார்.
எண்ணெய் வளம் மிக்க ஆசிய நாடானா புருனே இளவரசர் அப்துல் மதின் (32). இவர், அரச குடும்பத்தை சாராத பெண்ணான 29 வயதான தனது காதலி யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை இன்று திருமணம் செய்யவுள்ளார். 10 நாட்கள் திருமண கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி, தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடத்தாலான மசூதியில் நடைபெறவுள்ளது.
உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னராகவும், இந்த கிரகத்தின் மிகப் பெரிய செல்வந்தராகவும் அறியப்படும் சுல்தான் ஹசனல் போல்கியாவின் 10ஆவது குழந்தை புருனே இளவரசர் அப்துல் மதின் ஆவார்.
undefined
இளவரசர் அப்துல் மதின் திருமணம் செய்துகொள்ளும் யாங் முலியா அனிஷா, அவரது தந்தையின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரின் பேத்தியாவார். தொழிலதிபரான யாங் முலியா அனிஷா,ஃபேஷன் பிராண்ட் மற்றும் சுற்றுலா வணிகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அரச குடுமத்தின் இந்த திருமணம், 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் நடைபெறும் பிரமாண்டமான விழா மற்றும் ஊர்வலத்துடன் வருகிற ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.
இளவரசரின் திருமணத்திற்கு அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திருமண ஊர்வலத்தை காண புருனே மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா பயணம்!
புருனே அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை, அந்த சிறிய நாட்டின் அதீத செல்வத்தை எடுத்துக்காட்டுகிறது. அந்நாட்டின் செல்வம் அதன் எண்ணெய் இருப்புகளிலிருந்து பெறப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடான புருனே, 14 ஆம் நூற்றாண்டில் அதன் ஆட்சியாளர்கள் இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்பு பௌத்தம் மற்றும் இந்து மதத்தை தழுவியிருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த புருனே, 1984ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமலில் உள்ள சுமார் 450,000 மக்கள்தொகை கொண்ட மன்னராட்சி நாடான புருனே உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். சர்வதேச நாணய நிதியத்தின்படி, அந்நாட்டின் ஆண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 36,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
புருனே இளவரசர் அப்துல் மதின், அரியணை ஏற வாய்ப்பில்லை என்றாலும், அவரது தோற்றமும் சமூக ஊடகங்களில் பெரும் பின்தொடர்வதும் அவரை அரச குடும்பத்தின் மிக உயர்ந்த உறுப்பினர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது. அந்நாட்டின் விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட்டான அவர், பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் அவ்வப்போது ஒப்பிடப்படுவார்.
பிரிட்டனின் ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டில் அதிகாரி கேடட் பட்டம் பெற்ற அவர், 2019 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் போலோ விளையாட்டில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கும், 2022ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கும் இளவரசர் அப்துல் மதின் தனது தந்தையுடன் சென்றார்.