பிரேசில் சிறையில் பயங்கர மோதல்... 57 பேர் உயிரிழப்பு... 16 தலைகள் துண்டிப்பு...!

Published : Jul 30, 2019, 02:09 PM IST
பிரேசில் சிறையில் பயங்கர மோதல்... 57 பேர் உயிரிழப்பு... 16 தலைகள் துண்டிப்பு...!

சுருக்கம்

பிரேசிலில் சிறை கைதிகளுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதலில் 57 பேர் உயிரிழந்தனர். இதில், 16 கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொடூரம் கொலை செய்யப்பட்டனர்.

பிரேசிலில் சிறை கைதிகளுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதலில் 57 பேர் உயிரிழந்தனர். இதில், 16 கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொடூரம் கொலை செய்யப்பட்டனர். 

 
 
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறையில் இரண்டு பிரிவு கிரிமினல் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் திடீரென இரு குழுக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அறைகளின் மேற்கூரைகளுக்கு தீ வைத்தது.  இதைத் தொடர்ந்து கத்திகளுடன் இரண்டு குழுவினரும் மோதிக் கொண்டனர். இதில், 57 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 பேரில் 16 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர் 5 மணிநேரம் போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் அமேசான் நகரிலுள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!