பாகிஸ்தானின் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய பயற்சி விமானம் ஒன்று ராவல்பிண்டியில் வழக்கம் போல பயிற்சியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதன் புறநகர் பகுதியான மோரா கலு என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 5 ராணுவ வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவலை ராணுவம் இதுவரை வெளியிடவில்லை. விமானம் விபத்துக்கு உள்ளான குடியிருப்பு பகுதிகளில் இருந்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.