10 மாத இரட்டைக் குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாய்...!

By Thiraviaraj RM  |  First Published Jul 29, 2019, 4:30 PM IST

10 மாத இரட்டை குழந்தைகளை பெற்ற தாயே வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 மாதக் குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் கழிப்பறையில் இரு குழந்தைகளும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 


இதுகுறித்து குழந்தைகளின் தாய், குழந்தைகளின் தந்தையிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ’’இரட்டைப் பெண் குழந்தைகளை தானே கழுத்து அறுத்து கொலை செய்ததாகவும், அறுத்த கத்தியை அந்த இடத்தில் வைத்துவிட்டு பின்னர் தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என குறித்த தாய் தெரிவித்தாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Latest Videos

சந்தேக நபராக கருதப்படும் குழந்தைகளின் தாயாரான 26 வயதுடைய பெண் மனநோயாளி எனக் கூறப்படுகிறது. நிந்தவூர் ஆதார வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!