உலகத்தை உலுக்கும் புகைப்படம்... உயிர் போகும் கடைசி நொடியில் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி..!

Published : Jul 28, 2019, 06:06 PM IST
உலகத்தை உலுக்கும் புகைப்படம்... உயிர் போகும் கடைசி நொடியில் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி..!

சுருக்கம்

சிரியாவில் வான்வழித் தாக்குதலில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சிரியாவில் வான்வழித் தாக்குதலில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. 

அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

 

ஆனால் உயிருக்குப் போராடிய நேரத்திலும் ரிஹா செய்த செயல் அனைவரையும் கண்கலங்க செய்தது. இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்த குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது. ஆனால், தங்கையை காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவங்கள் அடங்கிய புகைப்படம்தான் உலகளவில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!