அதிரடி வான்வழி தாக்குதல்... 20 தலிபான் தீவிரவாதிகள் உடல்சிதறி பலி..!

By vinoth kumar  |  First Published Jul 28, 2019, 2:38 PM IST

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில இடங்களில் தீவிரவாதிகள் தொடர்ந்து அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

Latest Videos

கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தலிபான் தீவிரவாதிளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாகாணத்தின் உள்ள காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

click me!