ஸ்காட்லாந்தில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவருக்கு முதன் முறையாக கீட்டமைன் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்காட்லாந்தில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவருக்கு முதன் முறையாக கீட்டமைன் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆபரேஷன் செய்யப்பட்ட போது அந்த முதியவருக்கு கெட்டமைனை வக்லி நிவாரணியாக கொடுத்தனர். இதனால் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட போது வலியை உணராத அவர் ஓ பேபி என்று கூச்சலிட்டார். அதே நேரத்தில் மருத்துவர்கள் அவரது உடைந்த கணுக்கால் மீட்டமைத்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும் ஆபரேஷன் செய்து கொண்டிருக்கும் போது நோயாளியான நீல் தன்னிலை ’மறந்து நான் மனிதன்’ என தன்னிலை மறந்து உற்சாகமாக கத்தினார். ஆபரேசன் செய்யும் போது உற்சாகமாக கூக்குரலிட்ட உலகில் முதல் அறுவைசிகிச்சை இதுவாகத்தான் இருக்கும்.
ஸ்கேட்டிங் போர்டு விளையாடும் போது நீலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அப்போது ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் கெட்டமைன் கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்டது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 30 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் போர்டில் ஒரே பலகையை பயன்படுத்தியதால் கீழே விழுந்த அவரது கணுக்கால் நொறுங்கியது.
சிகிச்சையின் போது வலியை குறைக்க அவருக்கு கெட்டமைன் வழங்கப்பட்டது. அதை அவருக்கு செலுத்திய உடன் பலனை அளிக்கத் தொடங்கியது. இதுகுறித்து மருத்துவத்தில் ஆலோசகரான டாக்டர் அமித் ராய் கூறுகையில், "கெட்டமைன் மிகவும் சக்திவாய்ந்த மயக்க மருந்து. இது மிகவும் தனித்துவமானது, இதை உட்செலுத்திய சிறிது நேரத்தில் பலனை அளிக்கும். அறுவை சிகிச்சையின்போது எனவே நோயாளி விழித்திருக்கலாம், ஆனால் வேறு சில மயக்க மருந்துகளைப் போலவே முழுமையாக இருப்பதைக் காட்டிலும் அவர்களின் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார். கெட்டமைன் பி வகுப்பு மருந்து, ஆனால் மருத்துவர்களால் மயக்க மருந்தாக பயன்படுத்த உரிமம் பெற்றது.
நம்பமுடியாத அளவிற்கு விரைவாக இயங்குகிறது. நோயாளிகளை 'டிரான்ஸ் போன்ற' நிலையில் வைக்கிறது, இதனால் அவர்கள் வலியை உணர முடியாது. நீல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஏனெனில் அவர் உட்செலுத்தப்பட்ட பின் விளைவுகளை விரைவாக அனுபவிக்கத் தொடங்கினார் எனக் கூறினார்.