11 வயது சிறுவன் லிப்டில் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
11 வயது சிறுவன் லிப்டில் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள பாரமவுண்ட் எமோஷன்ஸ் சொசைட்டியின் லிப்டில் மாட்டிக் கொண்ட சிறுவன், 45 நிமிடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். இதுக்குறித்த வீடியோவில், ஒரு குழந்தை லிப்டிற்குள் இருப்பதையும், அவனது நண்பன் அதன் வெளியே நிற்பதையும் லிப்ட் கதவை பலமுறை திறந்து மூடுவதைக் காணலாம்.
இதையும் படிங்க: தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி... முன்னாள் போலீஸ் அதிகாரி வெறிச் செயல்.
சிறுவன் லிப்ட் பொத்தான்களை அழுத்திக்கொண்டே லிப்ட் கதவுகளுக்கு இடையில் ஒரு பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார். பின்னர் அவர் லிப்டில் சிக்கியுள்ளார். இதை அறியாத பெற்றோர்கள், தங்கள் குழந்தையை காணவில்லை என தேடியுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
நீண்ட நேரம் குழந்தையை தேடிய நிலையில், குடும்பத்தினரின் கவனம் லிப்ட் மீது சென்றது. இதை அடுத்து குழந்தை லிப்டின் உள்ளே இருந்து கண்டெடுக்கப்பட்டார். 11 வயது சிறுவன் லிப்டிற்குள் சுமார் 45 நிமிடங்களுக்குள் சிக்கியிருந்த நிலையில், அவரது பெற்றோர் அவரை காப்பாற்றியுள்ளனர். இதுக்குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.