அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மெர்சிட் கவுண்டியை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (27). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களுடன் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோர் வசித்து வந்தனர்.
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கத்தி முனையில் கடத்தப்பட்ட நிலையில் அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மெர்சிட் கவுண்டியை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (27). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களுடன் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் உள்ள ஹர்சி பின்டி பகுதியை சீக்கியர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வணிக வளாகம் சென்ற 4 பேரும் கத்திமுனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மெர்சிட் கவுண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடத்தப்பட்டவரில் ஒருவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்த முயற்சித்த போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்ததனர்.
இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட 4 பேர் கலிபோர்னியாவில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.