நேற்று ஆகஸ்ட் 23ம் தேதி 2023 அன்று காலை சிங்கப்பூரைச் சுற்றியுள்ள 18 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர், திடீரென நேற்று காலை சிங்கப்பூரின் "சுற்றுச்சூழல் கட்டிடத்தில்" இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடம் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது குறித்து பேசியபோது இந்த தகவலை தெரிவித்தார்.
நேற்று ஆகஸ்ட் 23ம் தேதி காலை 9:10 மணியளவில், இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார். மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த 18 இடங்கள் சிங்கப்பூரில் உள்ள அரசாங்க கட்டிடங்கள், தூதரகங்கள் மற்றும் பிற சிங்கப்பூரின் முக்கிய இடங்கள் என்று அவர் மதர்ஷிப் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் பெற்ற பிறகு, உடனடியாக பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் காவல்துறை ஒருங்கிணைத்ததாகவும், ஆனால் அங்கு கவலைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"மேலும் சிங்கப்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபரால், மின்னஞ்சல் மூலம் அண்மையில் கொரியா நாட்டிற்கும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் பின்னர் அது வேறும் புரளி என்று தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திரயான்-3 வெற்றி: பொறாமையில் பொங்கும் பாகிஸ்தான்; வரவேற்கும் மக்கள்!
புரளியாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பிற்கு வரும் அச்சுறுத்தல்களை போலீசார் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து தவறான தகவல்களை வேண்டுமென்றே தெரிவிப்பவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள் என்றும் செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
கட்டிட வளாகத்தில் அச்சுறுத்தல்கள் வந்தால், சந்தேகத்திற்கிடமான பொருட்களை சரியான முறையில் தேடுவதற்கும், அவற்றை பத்திரமாக கையாளுவதற்கும் பாதுகாப்பு அதிகாரிகள் அல்லது துணை போலீஸ் அதிகாரிகள் (ஏபிஓக்கள்) பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று அவர் விளக்கினர்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வழக்கத்திற்கு மாறான உடை மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை கொண்ட நபர்கள் அல்லது விசித்திரமான வாசனையை வெளியிடும் பார்சல்கள் போன்ற சந்தேகத்திற்கிடமான பொருட்களைப் பற்றி உடனே போலீசாருக்கு புகாரளிக்குமாறும் செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்துகிறார்.
குற்றவியல் சட்டம் 1871ன் பிரிவு 268Aன் கீழ், தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிய தவறான தகவலைப் புகாரளிக்கும் வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர், இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, வாக்னர் குழு தலைவர் ரஷ்ய விமான விபத்தில் மரணம்? உண்மை என்ன?