திட்டமிட்டதை விட சுமார் 6 மணிநேரத்திற்கு முன்னதாகவே ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கூறியுள்ளது.
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி இ வில்மோர் இல்லாமல் போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ளது.
கம்ட்ராப் வடிவ போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளித் துறைமுகத்தில் சுமார் உள்நாட்டு நேரப்படி காலை 9:30 மணிக்கு மெதுவாகத் தரையிறங்கியது. பாராசூட் மற்றும் ஏர்பேக்குகள் உதவியுடன் மெதுவான தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது.
திட்டமிட்டதை விட சுமார் 6 மணிநேரத்திற்கு முன்னதாகவே ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கூறியுள்ளது.
The spacecraft is back on Earth.
At 12:01am ET Sept. 7, ’s uncrewed Starliner spacecraft landed in White Sands Space Harbor, New Mexico. pic.twitter.com/vTYvgPONVc
பல வருட தாமதங்களுக்குப் பிறகு, ஸ்டார்லைனர் ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்றது. சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகு சுற்றுப்பாதை ஆய்வகத்திற்குச் சென்றது. ஆனால் எதிர்பாராத விதமாக அதில் உள்ள த்ரஸ்டர் செயலிழப்பு மற்றும் ஹீலியம் கசிவுகள் ஏற்பட்டன.
இதனால், புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரும் திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் ஸ்பேஸ்ஷிப் மூலம் அவர்களை பூமிக்கு அழைத்துவருவது தான் பாதுகாப்பானது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் பிப்ரவரி 2025 வரை விண்வெளியில் காத்திருக்க வேண்டி இருப்பதாக நாசா கூறியுள்ளது.
கம்ட்ராப் வடிவ காப்ஸ்யூல் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளித் துறைமுகத்தில் தரையிறங்கியது. பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்தபோது 3,000 டிகிரி ஃபாரன்ஹீட் (1,650 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைத் தாங்கிக் கொண்டு பூமியை வந்தடைந்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்போது?
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் 2025 பிப்ரவரி மாதம் வரை விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா ஏற்கெனவே கூறியுள்ளது. விண்வெளி நிலையத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டது, டெஃப்லான் சீல் பாதிக்கப்பட்டது ஆகியவை தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளன. அவற்றைச் சரிசெய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பின்புதான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வரமுடியும் என்பதுதான் இப்போதைய நிலையாக உள்ளது. பூமிக்குத் திரும்பும்போது, போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ஸ்பேஷ்ஷிப்பிற்குப் பதிலாக ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஸ்பேஸ்ஷிப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் நாதா குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் செல்லும்போதும் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சக விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக உள்ளனர். அதற்கான வசதிகள் அனைத்தும் அங்கு உள்ளன என்பதால் கவலைப்படத் தேவையில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.