
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நிலவில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த நிறுவனம் நாசாவிற்காக நிலவில் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1, இந்த சாதனையை அடைந்த இரண்டாவது தனியார் லேண்டர் ஆகும்.
ப்ளூ கோஸ்டின் திட்ட மேலாளர் ரே ஆலன்ஸ்வொர்த் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள திட்டக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆன்லைனில் நேரலை ஒளிபரப்பில் இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். "எங்களுக்கு எந்த பெரிய சிக்கலும் ஏற்படவில்லை, இது அற்புதமானது." என்று அவர் கூறினார்.
நிலவில் இன்டர்நெட் வசதி; நோக்கியா உதவியுடன் 'அதேனா லேண்டர்' ஏவிய நாசா
"நாங்கள் அமெரிக்காவை முதன்மைப்படுத்தப் போகிறோம், அமெரிக்காவை பெருமைப்படுத்துகிறோம், அமெரிக்க குடிமக்களுக்காக இதைச் செய்கிறோம்" என்று நாசாவின் தற்காலிக இயக்குனர் ஜேனட் பெட்ரோ கூறினார்.
ஏற்கெனவே, ஒரு வருடத்திற்கு முன்பு, முதல் முதலில் வணிக ரீதியாக ஒரு நிறுவனம் சந்திரனில் தரையிறங்கி சாதனை படைத்தது. அதற்கு அடுத்து இந்த புளூ கோஸ்ட் திட்டம் வருகிறது. "கோஸ்ட் ரைடர்ஸ் இன் தி ஸ்கை" (Ghost Riders in the sky) என்று செல்லப்பெயர் பெற்ற இந்த நிலவுப் பயணத் திட்டம் நாசாவுக்கும் உதவி செய்கிறது.
விண்வெளி வீரர்களை சந்திரனில் இருந்து பூமிக்குத் திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட திட்டமான ஆர்ட்டெமிஸை ஆதரிப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் நாசா இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ளது.
ப்ளூ கோஸ்ட் மிஷன்:
ஒரு நீர்யானையின் அளவுள்ள தங்க நிற லேண்டர், ஜனவரி 15ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. வழியில் பூமி மற்றும் சந்திரனின் காட்சிகளைப் படம்பிடித்தது. மே மாதம் தரையிறங்க முயற்சிக்கவிருந்த ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் லேண்டருடன் இது பயணத்தைப் பகிர்ந்துகொண்டது.
ப்ளூ கோஸ்ட் லேண்டர், சந்திரனின் மண்ணைப் பகுப்பாய்வு செய்யும் கருவு, கதிர்வீச்சைத் தாங்கும் கணினி, சந்திரனைச் சுற்றிச் செல்ல தற்போதுள்ள உலகளாவிய செயற்கைக்கோள் அமைப்பைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சோதிக்கும் ஒரு கருவி என 10 கருவிகளைக் கொண்டுள்ளது.
சந்திரனில் ஒரு முழுநாள் (பூமியின் 14 நாட்கள்) செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ப்ளூ கோஸ்ட், மார்ச் 14 அன்று முழு சந்திர கிரகண காட்சியின் உயர்தரப் படங்களைப் பதிவுசெய்து பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ல் இந்த பேரழிவுகள் நடக்கும்! டைம் ட்ராவலரின் பகீர் கணிப்புகள்!