இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் ராணியாக கடந்த 70ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரஸ் கேஸ்டலில் கடந்த 8ம் தேதி காலமானார். பிரிட்டன் அரச வம்சத்தில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் ராணி 2ம் எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார் மன்னர் சார்லஸ்; இன்று அதிகாரபூர்வ பிரகடனம்!!
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு தேதி இன்னும் இறுதியாகவில்லை. அனேமாக வரும் 19ம் தேதி இறுதிச்சடங்கு நிகழ்ச்சி வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில்நடக்கலாம். கடந்த 1952ம் ஆண்டு பிரிட்டன் ராணியாக இந்த தேவாலயத்தில்தான் ராணி எலிசபெத் மகுடம் சூடினார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நேற்று கொலம்பஸ் விமானநிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்பீர்களா என்று கேள்வி எழுபப்பட்டது.
அதற்கு அதிபர் பிடன் “ ஆமாம் பங்கேற்பேன். ஆனால், அதன் விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஆனால் அதில் பங்கேற்கப் போகிறேன். இதுவரை 3ம் சார்லஸுடன் நான் பேசவில்லை. எனக்கு அவரைத் தெரியும், இதுவரை அவரிடம் பேசியதில்லை” எனத் தெரிவித்தார்
கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !
கடந்த 1982ம் ஆண்டு முதல்முறையாக ராணி எலிசபெத்தை ஜோ பிடன் சந்தித்திருந்தார். அதன்பின் 2021ம் ஆண்டு பிரிட்டனுக்கு ஜோ பிடன் பயணத்தின்போது ராணி எலிசபெத்தைச் சந்தித்தார்.
ராணி எலிசபெத் மறைவு குறித்து அதிபர் ஜோ பிடன் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ராணி 2ம் எலிசபெத் தனது புத்திசாலித்தனத்தால் எங்களை கவர்ந்தார். கருணையால் எங்களை ஈர்த்தார். அவரின் அறிவுக்கூர்மையை எங்களுடன் தாராளமாக பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்க இரட்டை கோபுரம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டபின், எங்களின் இருண்ட நாட்களில் அமெரிக்காவுடன் ஒற்றுமையாக துணையாக எலிசபெத் இருந்தார். 'துக்கம் என்பது காதலுக்கு நாம் கொடுக்கும் விலை' என எங்களுக்கு நினைவுபடுத்தினார்” எனத் தெரிவித்திருந்தார்.
வைரங்களுடன் ஜொலித்த இந்திய நெக்லஸ்: ராணி எலிசபெத்துக்கு ஹைதராபாத் நிஜாம்வழங்கிய பரிசு
ராணி 2ம்எலிசபெத் இறுதிச்சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், அதிபர்கள், பல்வேறு நாடுகளின் மன்னர்கள், ராணிகள் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது