சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, தலைநகரான பெய்ஜிங் நகரில் 100 ஆண்டுகள் பழமையான நாடக அரங்கில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ரெஸ்டாரன்ட்கள் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, தலைநகரான பெய்ஜிங் நகரில் 100 ஆண்டுகள் பழமையான நாடக அரங்கில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ரெஸ்டாரன்ட்கள் மூடப்பட்டுள்ளன.
பெய்ஜிங் நகரில் உள்ள ஜிக்ஸியாங் நாடக அரங்கு கடந்த 1906ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நாடக அரங்காகும். இந்த அரங்கில் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடக்கும்.
undefined
முதல்முறையாக! உலகின் பார்வைக்கு மகளை அறிமுகப்படுத்திய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
ஆனால், சீனாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுல்ளது. சீனாவில் இன்று மட்டும் 24,263 பேர் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டனர். தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 550 பேர் பாதிக்கப்பட்டனர்
பெய்ஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து, மக்கள் கூட்டமாக கூடுவதற்கும், வணிக வளாகங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜிக்ஸியாங் நாடக அரங்கும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இன்னுமா லாக்டவுன்! சீன அரசின் முரட்டு விதிகளுக்கு எதிராக மக்கள் வன்முறை! வைரல் வீடியோ
பெய்ஜிங்கில் உள்ள மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறவும், ஹோட்ல்களிலும், வணிக வளாகங்களில் கூடவும் அரசு தடை விதித்துள்ளது. ரெஸ்டாரன்ஸ்ட், ஷாப்பிங் மால் ஆகியவை மூடப்பட்டுள்ளன. யாருக்கேனும் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டால், அவரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் ஒட்டுமொத்த அலுவலகமும் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டு வருகிறது
பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற பெக்கிங் பல்கலைக்கழகமும் புதன்கிழமை முதல் வகுப்புகளை ரத்து செய்துள்ளது. காய்கறிச் சந்தைக்கு சென்ற மக்கள் அங்கு கொரோனா பரவல் இருந்ததால், தங்கள் சொந்த செலவிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள பெய்ஜிங் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குவாங்ஜு நகர நிர்வாகம், 2.50 லட்சம் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் வகையில் மிகப்பெரிய அரங்கை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த நகரில் மட்டும் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவோடு ஒப்பிடும்போது, சீனாவில் தினசரி கொரோனா தொற்று குறைவுதான். இருப்பினும்,ஜிரோ கோவிட் கொள்கையை சீன கம்யூனிஸ்ட் அரசு கடைபிடிப்பதால் கொரோனோ வந்த ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.