
இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் முடிந்து இருபக்கமும் அமைதி நிலவி வருகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு கட்டுச் சோற்றில் எலி என்பது போல பலுசிஸ்தான் சிக்கல் தலைவலியாக எழுந்துள்ளது.
பலூச் விடுதலை ராணுவம் ஆபரேஷன் ஹெரோஃப்
பலூச் விடுதலை ராணுவம் (BLA) பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக 'ஆபரேஷன் ஹெரோஃப்' என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன் கீழ், கடந்த சில வாரங்களில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 51க்கும் மேற்பட்ட இடங்களில் 71 "ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு" BLA பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் உலகளாவிய பயங்கரவாதிகளுக்கு "வளர்ப்பு நிலம்" என்று கூறிய BLA, பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
மேற்கில் திணறும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் மறுபக்கம் பலுசிஸ்தான் போராளிகளுடன் போராடி வருகிறது. தென்மேற்கில் உள்நாட்டு எழுச்சியாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தானுக்கு சவாலாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் இஸ்லாமாபாத் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. அத்தகைய பின்னணியில், பலுசிஸ்தான் தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக முன்பு இருந்தது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
பலுசிஸ்தானுடன் தென்னிந்தியாவுக்கு முன்பு தொடர்பு இருந்திருப்பது அங்கு அந்த மக்கள் பேசும் மொழியில் இருந்து தெரிய வருகிறது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான், தென்னிந்தியாவுடன் வரலாற்று ரீதியாக உறவுகளைக் கொண்டுள்ளது. முதன்மையாக 'பிரஹுய்' என்ற திராவிட மொழி மூலம் இது அறியப்படுகிறது. திராவிட மொழியான பிரஹுய், பலூசிஸ்தானில் சுமார் 2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது மற்றும் தென்னிந்தியாவில் உள்ள திராவிட மொழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சில நிபுணர்கள் பிரஹுய் மக்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் சந்ததியினர் என்று நம்புகிறார்கள். அது திராவிடம் என்று வரலாறு கூறுகிறது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றாக பலூசிஸ்தான் இருக்கிறது. ஆனாலும், ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாததாக குறைந்த மக்கள் தொகை கொண்டதாகவே உள்ளது. பாகிஸ்தானிய மொழியைத் தவிர, பிரஹுய் மொழி பேசுபவர்கள் சிறிய அளவில் இரானி பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானில் உள்ள மார்வ் சோலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றனர் என்று சான்றுகள் கூறுகின்றன. இந்த மொழி அதைச் சுற்றியுள்ள எந்த மொழிகளுடனும் தொடர்பில்லை. ஆனால் தொலைதூர தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுடன் தொடர்புடையது என்று அறியப்படுகிறது.
சுமார் 2000 கிமீ தொலைவில் அமைந்துள்ள இரண்டு பிராந்தியங்களுக்கு இடையிலான வரலாறு, மொழியைப் பார்க்கும்போது சேவா வம்சம் போன்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்து ஆட்சியாளர்கள் ஏழாம் நூற்றாண்டு வரை பலுசிஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்ததற்கான பதிவுகள் உள்ளன. சில நிபுணர்கள், பிரஹுய்கள் சிந்து சமவெளி நாகரிக மக்களின் சந்ததியினர் என்று கருதுகின்றனர். அவர்கள் திராவிடர்கள் என்று கூறப்படுகிறது.
பலூசிஸ்தானில் தொடரும் உள்நாட்டுக் கலவரம்
பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பே, பலூச் பகுதியில் ஒரு சிதறிய சமூகம் இருந்ததாக கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில், அந்தப் பகுதியின் பழங்குடியினர் ஒன்றிணைந்து தமக்கென ஒரு ராணுவத்தை உருவாக்கி உள்ளனர். ஆனால், காலத்தால் தாங்கி நிற்க முடியவில்லை. 1884 ஆம் ஆண்டில், பலூசிஸ்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. அப்போதும் உள்நாட்டு மோதல்கள், சிக்கல்கள் தீர்க்கப்படாமல்தான் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் போது, பல பலூச் தலைவர்கள் தங்களது பகுதிக்கு சுதந்திரம் வேண்டும் என்றும், தனி நாடு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், உள்ளூர் தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மாகாணம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது.
மலையாளத்துடன் தொடர்பா?
பிரஹுய் ஒரு திராவிட மொழி என்று அழைத்தாலும், மலையாளத்தில் கனுகா போன்ற சில சொற்களின் பிரதிபலிப்புடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக பலூச் போராளிகள்
பலூசிஸ்தான்1950 களில் பெரும் போராட்டங்களைக் கண்டது. இன்றைய பலூசிஸ்தான் 1970 ஆம் ஆண்டளவில்தான் உருவானது. மற்றொரு வங்காளதேசம் உருவாவதைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவம், இரும்புக் கரம் கொண்டு இவர்களை அடக்கியது. கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இரண்டு பெரிய போராளிப் படைகள் உருவாகியுள்ளன. பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி என்ற பெயரில் உருவாகின. இந்த இரண்டு போராளி அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு எதிராக மாறியுள்ளன.
எப்படி தமிழ், மலையாளம், பிரஹுய் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று சில வார்த்தைகளில் பார்க்கலாம்:
இன்று – ஐனோ (பிரஹுய்), இன்று (தமிழ், மலையாளம்)
நீ – நீ (பிரஹுய்), நீ (தமிழ், மலையாளம்)
வா – பா (பிரஹுய்), வா (தமிழ், மலையாளம்)
குறட்டை – குர்காவ் (பிரஹுய்), குறட்டை (தமிழ்)
கண் – சாண் (பிரஹுய்), கண் (தமிழ்)
கல் – சால் (பிரஹுய்), கல் (தமிழ்)
பால் – பால் (பிரஹுய்), பால் (தமிழ்)
தகவல் – ஹவல் (பிரஹுய்), தகவல் (தமிழ்)